பக்கம் எண் :

226சுந்தர காண்டம்

மண்ணுலகம் அறியவும்;பிடித்தான் - கவர்ந்தான்; எனும் மாற்றம் - என்று
பேசப்படும் மொழி; பிழையாது - தவறாது (நான்); ஆழி இலங்கையினை -
கடல் நடுவுள்ள இலங்கை மாநகரை; எடுத்து - பெயர்த்தெடுத்து; இருங்கடல்
இட்டு -
பெரிய கடலினுள் போகட்டு; இவனை - இந்த இராவணனை;
முடித்தால் -
அழித்தால் (பிறகு) மன்ற உறுதியாக; யான் - நான்; முடிதல் -
அழிதல்; மன்ற முறை - உறுதியாக நியாயம் ஆகும்; என்று உணர்வான் -
என்று நினைப்பவன் ஆனான்.

     வடித்து -சீவப்பெற்று. மஞ்சு ஒக்கும் அளகஓதி மழை ஒக்கும் வடித்த
கூந்தல் என்று சூர்ப்பணகை பேசினாள்.

     பிழையாதால் -ஆல் - அசை. முடித்தாலே - ஏ அசை. ஆழி -
வட்டம்.                                                 (233)

5068.

எள்உறையும் ஒழியாமல்
    யாண்டையுளும் உளனாய்த்தன்
உள்உறையும்ஒருவனைப் போல்
     எம்மருங்கும் உலாவுவான்
புள் உறையும்மானத்தை
     உறநோக்கிஅயல் போவான்
கள் உறையும்மலர்ச்சோலை
     அயல் ஒன்றுகண்ணுற்றான்.

     தன்உள் உறையும்-  தன்னுடைய இதயத்தில் வாழும்; ஒருவனைப்
போல் -
இராமபிரானைப்போல்; எள் உறையும் - எள் தங்கும் சிற்றிடமும்;
ஒழியாமல் -
விடாமல்; யாண்டையுளும் - எவ்விடத்திலும்; உளனாய் -
இருப்பவனாய்; எம்மருங்கும் உலாவுவான் -  எவ்விடத்தும் சஞ்சரிக்கும்
அனுமன்; புள் உறையும் - பறவைகள் தங்கியுறையும்; மானத்தை -
ஆகாயத்தை; உற நோக்கி - உற்றுப்பார்த்து; அயல் போவான் -
அரண்மனையை (விட்டு) வெளியே செல்பவன்; கள் உறையும் மலர் - தேன்
பொழிந்த மலர்கள் உடைய; சோலை ஒன்று -  ஒரு சோலையை; அயல் -
பக்கத்தில்; கண்ணுற்றான் -  கண்டான்.

     ஒருவனைப்போல்  என்னும் பாடத்தினும் அழகனைப்போல் என்னும்
பாடம் சிறக்கும். ‘கரியனாய், வெளியன் ஆகிச் செய்யனாய்க் காட்டும் .... தன்
அகத்துறை அழகனே போல்’ என்னும் ஊர்தேடு படலம் (கம்ப. 4936).

     இராமபிரானைப்போன்றவன் அனுமன் என்று பேசப்படுவது இந்திய
தத்துவ இயல்பைக் காட்டும். ஊர் - நிறைவு.                      (234)