பக்கம் எண் :

228சுந்தர காண்டம்

 

ஊடுகண்டிலென்என்னின், பின், உரியது ஒன்று
                                  இல்லை;
வீடுவேன், மற்றுஇவ் விலங்கல்மேல் இலங்கையை
                                  வீட்டி’.

     மாடு நின்ற -பக்கத்தில் நிமிர்ந்துள்ள; மணிமலர் அ சோலை -
அழகிய மலர்கள் மலர்ந்த அந்தச் சோலையை; மருவி - (யான்) அடைந்து;
அவ்வழி - அவ்விடத்தில்; தேடி காண்பெனேல் - தேடிப் பிராட்டியைப்
பார்ப்பேனானால்; என் சிறுமை தீரும் - என்னுடைய துன்பம் நீங்கும்; ஊடு
கண்டிலென் என்னின் -
சோலையின் உள்ளே காணப் பெற்றிலேன் என்றால்;
பின் -  பிறகு; விலங்கல்மேல் இ இலங்கையை - திரிகூட மலையில் உள்ள
இந்த இலங்கைமா நகரை; வீட்டி - பாழாக்கி; வீடுவென் - யான் இறப்பேன்;
உரியது - செய்வதற்கு உரிய செயல்; மற்று ஒன்று இல்லை - வேறு ஒன்று
கிடையாது.

     சிறுமை -தேய்ந்து சிறிதாதல். (குறள் 769. பரிமேல்.) விலங்கல்மேல்
உள்ள இலங்கையை வீட்டி என்பதற்கு திரிகூட மலையின்மேலே உள்ள
இலங்கையை அழித்து என்று உரை கூறுவார் உளர். இக்கலித்துறை மா -
விளம் - விளம் - விளம் - மா என்னும் சீர்களை முறையே பெற்று வரும்.
இத்தகைய பாடல்கள் இந்நூலில் 1223 உள்ளன (மணிமலர் 76) இதனை
வை.மு.கோ. அவர்கள் காப்பியக் கலித்துறை என்று குறிக்கின்றார்.       (1)

5070.

என்று,சோலை புக்கு எய்தினன், இராகவன் தூதன்;
ஒன்றி வானவர் பூமழை பொழிந்தனர் உவந்தார்;
அன்று, அவ் வாள்அரக்கன் சிறை அவ் வழி வைத்த
துன்று அல்ஓதிதன் நிலை இனிச் சொல்லுவான்
                                  துணிந்தாம்.

     என்று - என்று சிந்தித்து;இராகவன் தூதன் - இராமபிரானின்
தூதனான அனுமன்; சோலை புக்கு எய்தினன் - சோலைக்குள் சென்று
சேர்ந்தான்; (அப்போது) வானவர் - தேவலோகத்தி்ருப்பவர்; ஒன்றி பூ மழை
பொழிந்தனர் -
ஒன்று சேர்ந்து பூமாரி பொழிந்து; உவந்தார் - மகிழ்ச்சி
அடைந்தனர்; இனி - இனிமேல்; வாள் அரக்கன் - வாள் ஏந்திய
இராவணனால்; அவ்வழி சிறைவைத்த - அச் சோலையில் சிறை
வைக்கப்பெற்ற; அல் துன்று ஓதிதன் - இருள் போன்ற கூந்தலையுடைய