பக்கம் எண் :

332சுந்தர காண்டம்

எண்ணார் - துன்புறுத்தநினையாமல்; செறிந்தார் - அடங்கியிருந்தனர்;
நெறிந்து ஆர் ஓதி -
சுருண்ட கூந்தலையுடைய; பேதையும் - பிராட்டியும்;
ஆவி நிலை நின்றாள் -
உயிர் நிலைக்கப் பெற்றாள்.

     அறிந்தார் -முக்காலமும் அறிந்த ஞானிகள். மன்னனை அஞ்சிப்
பிரியாதார், சீற்றம் பிரிந்தார். தீவினை அன்னார் தெறல் என்றார் செறிந்தார்,
பேதையும் ஆவி நிலை நின்றாள் என்று கூறுக. திரிசடையைத் தமிழாக்கி
முச்சடை என்றான்.                                      (159)