பக்கம் எண் :

334சுந்தர காண்டம்

சந்தக் கலித்துறை

5228.

‘காண்டற்குஒத்த காலமும் ஈதே; தெறு காவல்
தூண்டற்கு ஒத்தசிந்தையினாரும் துயில்கில்லார்;
வேண்டத்துஞ்சார்’ என்று, ஒரு விஞ்சை வினை
                                 செய்தான்;
மாண்டுஅற்றாராம் என்றிட, எல்லாம் மயர்பு உற்றார்.

(யான்)

     காண்டற்கு ஒத்த- பிராட்டியைக் காண்பதற்கேற்ற; காலமும் ஈதே -
காலமும் இதுவேயாகும் (ஆனால்); தெறுகாவல் - வருத்துகின்ற பாதுகாப்பை
(செய்ய); தூண்டற்கு ஒத்த - (ஏவுதற்குப் பொருத்தமான; சிந்தையினார் -
உள்ளம் உடையவர்கள்; துயில்கில்லார் - உறங்காமல் உள்ளனர்; வேண்ட -
யான் மனத்தால் விரும்ப; துஞ்சார் - உறங்கார்; என்று - கருதி (அனுமன்);
ஒரு - ஒப்பற்ற; விஞ்சை - ஒரு மந்திரத்தை; வினைசெய்தான் -
தொழில்படச் செய்தான் (பிரயோகித்தான்); எல்லாம் - எல்லா அரக்கிகளும்;
மாண்டு அற்றார் என்றிட - இறந்து உயிரற்றவர் போல; மயர்வுற்றார் -
மயக்கம் அடைந்தனர்.

     தூண்டுதல்,ஏவுதல், சிந்தை காவல் செய்யத் தூண்டுகிறது. வினை
செய்தல், தொழிற்படுத்தல். அற்றார் - உயிரற்றவர்கள். அனுமன் ‘கல்லாத
கலை இல்லை’ என்று முன்பு பேசப்பட்டான். ஆதலின் மந்திரத்தால்
அரக்கிகள் உறங்கச் செய்தான். மனோவாற்றலால் உறங்கச் செய்யமுடியும்
என்பதை உலகம் இன்று காண்கிறது.                             (1)

சீதையின் துயரமொழிகள்.

5229.

துஞ்சா தாரும் துஞ்சுதல் கண்டாள்; துயர் ஆற்றாள்;
நெஞ்சால்ஒன்றும் உய் வழி காணாள்,
                             நெகுகின்றாள்;
அஞ்சாநின்றாள்,பல் நெடு நாளும் அழிவுற்றாள்,
எஞ்சா அன்பால்,இன்ன பகர்ந்து, ஆங்கு, இடர்
                              உற்றாள்.

     பல்நெடுநாளும்அழிவுற்றாள் - பலநாட்கள் துன்புற்றபிராட்டி;
துஞ்சாதாரும் - உறங்காத அரக்கிமார்கள்; துஞ்சுதல் கண்டாள் -
உறங்குவதைப் பார்த்து; துயர் ஆற்றாள் - துன்பத்தைப்