பக்கம் எண் :

உருக் காட்டு படலம்337

நிழல்வீரை அன்னானுடனே- ஒளிவீசும் கடல்போன்ற இராமனுடன்;
நெடுநாள் உழல்வீர் -
நீண்ட நாட்கள் பழகியிருக்கிறீர்கள்; உரையாடிலிரோ
-
(உயிர்பற்றிப்) பேசவில்லையோ.

     நீங்கள்இராமனுடன் பேசியிருந்தால் அவர் என் உயிரின் இயல்பைக்
கூறியிருப்பார். நீங்கள் என்னை வருந்தீர். நீங்கள் அவனுடன் அதுபற்றிப்
பேசவில்லையோ, பிரிந்தாரை வாட்டும் மதி முதலானவை காவிய நாயகர்களால்
இகழப்படும் - நைடதம் முதலானவற்றில் இதைக் காணலாம். வீரை - கடல் -
செழுந்தென்றல் அன்றில் .... திரைவீரை என்மேல் பகையாட ஆடும்.
(திருமாளிகைத் தேவர் - உறவாகிய யோகம். 5                      (5)

5233.

‘வாராது ஒழியான் எனும் வண்மையினால்,
ஓர் ஆயிர கோடிஇடர்க்கு உடையேன்;
தீராய் ஒரு நாள்வலி - சேவகனே !
நாராயணனே ! தனிநாயகனே ! +

(இராமபிரான்)

     வாராது ஒழியான்- இங்கேவாராமல் அமைதி பெறான்; எனும் -
என்கின்ற ; வண்மையினால் - அவன் கருணை மிகுதியால்; ஓர் ஆயிர
கோடி -
பல்கோடியாகப் பெருகிவரும்; இடர்க்கு உடையேன் -
துன்பங்கட்குத் தளராமல் உள்ளேன்; சேவகனே - வீரம் உடையவனே;
நாராயணனே - திருமால் போன்றவனே; தனி நாயகனே - ஒப்பற்ற
தலைவனே; ஒருநாள் - ஒருதினம்; வலி தீராய் - என்னுடைய நோவைத்
தீர்ப்பாயாக.

     அரசர்களைத்திருமாலாகப் பேசுவது மரபு. அது பற்றித் திருமால் என்று
கூறினாள் என்றும் கொள்ளலாம். இதனைப் பூவை நிலை’ என்று தமிழ் மரபு
பேசும். வலி - நோவு. ‘வலியானே யான்பட்ட வலிகாணவாராயோ’ (கம்ப.
2833.) இப்பாடலில் உள்ள ‘வலி’ அனைவர்க்கும் தீராவலியாக உள்ளது.
ஏகநாயகன், தனி நாயகன் (கடவுள்) ‘ஏகநாயகனை இமயவர்க்கு அரசை’
(திருவிசை - சேந்தன் 1-1)                                   (6)

5234.

‘தரு ஒன்றிய கான் அடைவாய், “தவிர் நீ;
வருவென சில நாளினில்; மா நகர்வாய்
இரு” என்றனை;இன் அருள்தான் இதுவோ ?
ஒருவென் தனிஆவியை உண்ணுதியோ ? +