பக்கம் எண் :

338சுந்தர காண்டம்

(ஐயனே)

     தரு ஒன்றிய -மரங்கள் சேர்ந்துள்ள; கான் அடைவாய் - காட்டை
அடைய விரும்புபவளே; நீ தவிர் - நீ அந்த எண்ணத்தை விடு; சில
நாளினில் -
சில தினங்களிலே; வருவென் - (நான்) திரும்பி வருவேன்;
மாநகர்வாய் - பெரிய நகரின் கண்ணே; இரு - (அதுவரை) இருப்பாபாக;
என்றனை -
என்று கூறினாய்; இன் அருள் இதுவோ - உனது இனிய
கருணை இப்படிப்பட்டதோ? ஒருவென் -  தனித்துள்ள என்னுடைய; தனி
ஆவியை -
ஆதாரம் இல்லாத உயிரை; உண்ணுதியோ - உண்ணுகின்றாயோ.

     அடைவாய் -அடையும் சமயத்தில் என்றும் கூறலாம். ‘நான் கானகம்
வந்தால் துன்புறுவேன் என்று என் வருகையை மறுத்த நீ இன்று நான்
சிறையில் இருக்கும் போது வாராமல் உள்ளாய். உன் அருள்
இப்படிப்பட்டதோ’ என்றாள். உயிர் உண்ணுதல் - உயிரை வாட்டுதல். உருக்கி
என் உயிரொடும் உண்டு போனவன். (கம்ப. 533) என்று முன்பு பேசுகிறாள்.
இறைவனுக்கு உயிருண்ணி என்னும் பெயர் உள்ளதை அறிக. (திருவாசகம்)
தான் - உரையசை.                                          (7)

5235.

‘பேணும் உணர்வே ! உயிரே ! பெரு நாள்
நாண் இன்றுஉழல்வீர்;
தனி நாயகனைக்
காணும் துணையும்கழிவீர்அலிர்; நான்
பூணும் பழியோடுபொருந்துவதோ ?

     பேணும் - (என்னால்)பாதுகாக்கப் பெற்ற; உணர்வே - அறிவே;
உயிரே -
உயிரே (நீங்கள்); பெருநாய் - பலநாட்கள்; நாண் இன்று -
வெட்கம் இல்லாமல் (என்னுடன்); உழல்வீர் - வருத்தமடைகிறீர்கள்; தனி
நாயகனை -
ஒப்பற்ற தலைவனான இராமபிரானை; காணும் துணையும் -
யான் சந்திக்கும் வரை; கழிவீர் அலீர் - (என்னைவிட்டு) நீங்கமாட்டீர்கள்;
(நீங்கள் நீங்காமையால்) நான் - யான்; பூணும் - ஏற்றுக்கொண்டுள்ள;
பழியோடு - நிந்தையுடன்; பொருந்துவதே - ஒன்றுபட்டு வாழ்வதா ?.

     உயிர்முதலானவைதன்னைவிட்டு நீங்காமையால் தனக்குப் பழி
வந்துள்ளது என்று பிராட்டி கருதுகின்றார். புகழ் எனில் உயிரும் கொடுப்பது
நல்லோரியல்பு. அது வாய்க்கப் பெறாது பேசியபேச்சு. இன்று என்னும் எச்சம்
இன்றி என வந்தது. வினை எஞ்சு இகரம் உகரமாய் வரும் என்பது விதி.
‘மனனே! பெருநாள், பிரியாது உழல்வாய் (கம்ப. 1163) என்று முன்பும் பிராட்டி
பேசினாள்.                                                (8)