அனுமன், கடலைக்கடந்து, இலங்கையைத் தேடி, பிராட்டியைக் கண்டு,கணையாழியைத் தந்து, பொழிலைச் சிதைத்து, அரக்கரை வதைத்து,இராவணன் செருக்கைக் குலைத்து, மீண்டு வந்து வேதமுதல்வன் பாதத்தைவணங்கி, உயர்வற உயர்நலம் பெறுகிறான். இதுவே சுந்தர காண்டம்.