பக்கம் எண் :

468சுந்தர காண்டம்

     காட்சிப்படலத்தில் (கம்ப. 5096) இந்த நிகழ்ச்சியைப் பிராட்டி
நினைந்ததாகப் பேசப்படுகிறது.                                (77)

5422.

‘ “என் ஓர் இன் உயிர் மென் கிளிக்கு யார் பெயர்
                                   ஈகேன் ?
மன்ன !”என்றலும், “மாசு அறு கேகயன் மாது, என்
அன்னைதன் பெயர்ஆக” என அன்பினொடு, அந்
                                    நாள்,
சொன்ன மெய்ம்மொழி சொல்லுதி-மெய்ம்மை
                            தொடர்ந்தோய் !

     மெய்ம்மைதொடர்ந்தோய் - உண்மை நெறியில்இயங்கும்
அனுமனே;என் - என்னுடைய; ஓர் இன் உயிர் - ஒப்பற்ற இனிய உயிர்
போன்ற; மென்கிளிக்கு - மென்மையான கிளிப்பிள்ளைக்கு; யார் பெயர்
ஈகேன் -
எவருடைய பெயரை இடுவேன்; மன்ன - அரசே!; என்றலும் -
என்று யான்கூறியதும் (சீதையே); மாசு அறு - குற்றம் அற்ற; என் அன்னை
-
என்னுடைய தாயாகிய; கேகயன் மாது - கேகய வேந்தன் புதல்வியாகிய
கைகேயியின்; பெயர் ஆக - பெயர் அமைக; என - என்று; அன்பினொடு
-
அன்பினுடன்; அந்நாள் - அக்காலத்தில் (இராமபிரான்); சொன்ன
மெய்மொழி -
கூறிய மெய்ம்மையான வார்த்தையை; சொல்லுதி -
சொல்வாயாக;

     அனுமன் உண்மைபேசுபவன் என்று பிராட்டி கூறியது திருவடியின்
சீலத்தை உணர்ந்தமையால் என்க. இராமபிரான் சிற்றன்னை பால் கொண்ட
பேரன்பை நினைவு கூர்ந்தாள். ஈகேன் - வழங்குவேன். பெயரிடுதலை ஈதல்
என்பது மரபு போலும். ‘இராமன் எனப் பெயர் ஈந்தனன்’ என்று (கம்ப. 296)
பாலகாண்டம் பேசும். பேரறியாத பெரும் பொருளுக்குப் பெயர் வைத்தல்
தொண்டரின் உரிமை.                                      (78)

சீதை சூடாமணியைத்தருதல்

5423. 

என்றுஉரைத்து, ‘இனிது இத்தனை பேர்
                              அடையாளம்;
ஒன்று உணர்த்துவதுஇல்’ என எண்ணி
                             உணர்ந்தாள்,