| தன் திருத்துகிலில் பொதிவுற்றது, தானே வென்றது அச்சுடர், மேலொடு கீழ் உற மெய்யால், |
என்று உரைத்து -என்று கூறி(பிறகு பிராட்டி); இத்தனை பேர் அடையாளம் - இவ்வளவு பெரிய அடையாளம்; இனிது - இனிமையானது (இனி); உணர்த்துவது - கூறக்கூடிய செய்தி; ஒன்று இல் - வேறு ஒன்று இல்லை; என - என்று; எண்ணி - கருதி; தன் - தன்னுடைய; திருத்துகிலில் - அழகிய சேலையில்; பொதிவுற்றது - முடிந்து வைக்கப்பெற்றதும்; மேலொடு கீழ் - விண்ணுலகத்திலும் மண்ணுலகத்தி்லும்; உற - நன்றாக; மெய்யால் - தன்னுடைய மேனியால்; தானே - தான் ஒன்றியாகவே; அச்சுடர் வென்றது - அந்தச் சூரியனை வென்றதுமாகிய சூடாமணியை; உணர்ந்தாள் - (அனுமன் பால் வழங்க வேண்டும் என்று) அறிந்தாள். வாயால் கூறவேண்டிய அடையாளம் போதும். இனி கண்ணால் காண வேண்டிய அடையாளம் வழங்க எண்ணிய பிராட்டி சூடாமணியை அனுமன் பால் வழங்கக் கருதினாள். அனுமன்பால் சூடாமணி வழங்க வேண்டும் என்று அறிந்தாள். உணர்தல் - அறிதல். (79) 5424. | வாங்கினாள், தன் மலர்க்கையில்; மன்னனை முன்னா, ஏங்கினாள்; அவ்அனுமனும், ‘என்கொல் இது ?’ என்னா, வீங்கினான்;வியந்தான்; உலகு ஏழும் விழுங்கித் தூங்கு கார் இருள்முற்றும் இரிந்தது சுற்றும். |
(பிராட்டி)(சூடாமணியை) தன் - தன்னுடைய; மலர்க்கையில் - மலர் போன்ற கைகளில்; வாங்கினாள் - எடுத்தாள்; மன்னனை முன்னா - இராமபிரானை எண்ணி; ஏங்கினாள் - ஏக்கமுற்றாள்; அனுமனும் - (அது கண்ட) திருவடியும்; இது - பிராட்டியின் கையில் உள்ள இப்பொருள்; என்கொல் என்னா - யாதோ என்று; வீங்கினான் - உடல் பூரித்தான்; வியந்தான் - ஆச்சரியப்பட்டான் (அப்போது) (மணியின் ஒளியால்); உலகு ஏழும் விழுங்கி - ஏழு உலகங்களையும் உட் கொண்டு; தூங்கு - உறங்குகின்ற; கார் இருள் முற்றும் - கரிய |