பக்கம் எண் :

470சுந்தர காண்டம்

இருள் முழுவதும்; சுற்றும் - சுற்றுப் புறங்களில்; இரிந்தது - ஓடிப்போயிற்று.

     மன்னன் என்றதுஇராமபிரானை, இந்தச் சூடாமணி என்னால் மிகவும்
போற்றிப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. துக்கம் உண்டாகும் போது இதைக்
கண்டு உன்னைக் கண்டவள் போல மிகவும் களிக்கின்றேன்’ என்று பிராட்டி
பேசியதாக வான்மீகம் பேசும். அதைக் கருத்திற் கொண்ட கவிச்சக்கரவர்த்தி
‘மன்னனை முன்னா ஏங்கினாள்’ என்றார். மன்னன் என்றது ‘சனகன்’ என்றும்,
தசரதன் என்றும் கூறலாம் என்பர். சனகன் சூடாமணி வழங்கியவன்; தசரதன்
அந்த மணியைப் போற்றியவன் என்பர். இருள் உறங்குவதாகக் கூறும் மரபு
உண்டு போலும். ‘நெடுந்தூங்கிருள்’ (கம்ப. 9087) தூங்கிருள் வெய்யோற்கு
ஒதுங்கிப் புக்கிருந்தான் அன்ன பொழில் (நளவெண்பா. சுயம் 22) தூங்கு
இருள், தொங்கும் இருள் என்று உரை கூறப் பெற்றது. தூங்கிருள் - செறிந்த
இருள் என்று புறப்பாட்டுரை கூறும். துயில் மடிந்தன்ன தூங்கிருள் - (புறம்
126) இருள் தூங்கு இறுவரை (கலி - குறிஞ்சி7) இருள் தூங்கு சோலை. (கலி-
குறிஞ்சி 14) இனியர் ‘செறிந்த’ என்று உரை வகுத்தார்.               (80)

5425.

‘மஞ்சு அலங்கு ஒளியோனும், இம் மா நகர் வந்தான்,
அஞ்சலன்’ என,வெங் கண் அரக்கர் அயிர்த்தார்;
சஞ்சலம் புரிசக்கரவாகமுடன், தாழ்
கஞ்சமும்,மலர்வுற்றன; காந்தின காந்தம்.

     மஞ்சு - மேகத்திடையே; அலங்கு - அசைந்து செல்லும்;
ஒளியோனும்- சூரியனும்; இம் மாநகர் - இந்த இலங்கைக்கு; வந்தான் -
வந்துவிட்டானோ (இனி சூரியன்); அஞ்சலன் - பயப்படமாட்டான்; என -
என்றுகூறி; வெங்கண் அரக்கர் - கொடிய கண்களைப் பெற்ற அரக்கர்கள்;
அயிர்த்தார் - ஐயுற்றனர் (அவ்வொளியால்); சஞ்சலம்புரி -  மனச்சஞ்சலம்
பெற்ற;  சக்கர வாகமுடன் - சக்கரவாகப் பறவையுடன்; தாழ் - கூம்பித்
தாழ்வுற்ற; கஞ்சமும் - தாமரைகளும்; மலர்வுற்றன - மலர்ச்சி பெற்றன;
காந்தம் - சூரிய காந்தக் கற்கள்; காந்தின - ஒளியை வெளிப்படுத்தின.

     மஞ்சு - மேகம்.மஞ்சு நிகர் குந்தளமின்னே (காவடிச்சிந்து)
இராவணனுக்கு அஞ்சிய சூரியன் இலங்கைக்கு வந்து விட்டான் பகைவர்கள்
வருவர் என்பது குறிப்பு. சக்கரவாகம், பகலில் பெடையுடன் கூடி மகிழும்.
சூடாமணி ஒளி பகல்போல ஒளி வீசியது. அதனால் சக்கர வாகம் மலர்ந்தன.
இனி, பிராட்டி பெருமானை அடைவாள் என்பது குறிப்பு. சஞ்சலம் - கலக்கம்.
                                                      (81)