பக்கம் எண் :

சூடாமணிப் படலம்471

5426.

கூந்தல்மென் மழை கொள் முகில்மேல் எழு
                                கோளின்
வேந்தன் அன்னது,மெல்லியல்தன் திரு மேனி
சேந்தது, அந்தம்இல் சேவகன் சேவடி என்னக்
காந்துகின்றது,காட்டினள்; மாருதி கண்டான்.

     கூந்தல் -கூந்தலாகிய; மென்மழைகொள் - மெல்லிய மழையைக்
கொண்டுள்ள; முகில்மேல் - மேகத்தின் உச்சியில்; எழு - தோன்றுகின்ற;
கோளின் வேந்தன் அன்னது - (கோள்களின் அரசனாகிய) சூரியனைப்
போன்றிருப்பதும்; மெல்லியல்தன் - மெல்லியலாகிய பிராட்டியின்; திருமேனி
-
அழகிய ஒளி வீசும் மேனிபோல; சேந்தது - செந்நிறம் பெற்றதும்; அந்தம்
இல் -
முடிவேயில்லாத; சேவகன் - இராமபிரானின்; சேவடி என்ன -
திருவடி போல; காந்துகினற்து - ஒளி வீசுவதுமான சூடாமணியை;
காட்டினாள்; மாருதி கண்டான் - காட்டினாள்; அனுமன் பார்த்தான்

     கூந்தலைமழையாகவும் அளகத்தை மேகமாகவும் கூறுவது கவிச்
சக்கரவர்த்தியின் இயல்பு. மஞ்சு ஒக்கும் அளக ஓதி; மழை ஒக்கும் வடித்த
கூந்தல்’ என்று சூர்ப்பணகை பேசுவாள். ஆதலின் கூந்தலாகிய மழை கொண்ட
முகில் என்று பேசப்பெற்றது. கூந்தலாகிய முகில், மென் முகில், மழை முகில்
என்று கூட்டிப் பொருள் கூறுவாரும் உளர். மழை கொள் மென்கூந்தல் முகில்
என்று கூட்டிப் பொருள் செய்தவரும் உளர். மென்கூந்தல் மழை கொள்
முகில்மேல் என்று பிரித்து அளகபாரம் என்கின்ற குளிர்ச்சி கொண்ட
கருமேகத்தின் மேல் என்று உரை கூறியவரும் உளர். பிராட்டி செந்நிறம்...
ஆதலின் மெல்லியல்மேனி சேந்தது என்று கூறப் பெற்றது. இங்கே உவம
உருபு மறைந்துள்ளது. பிராட்டியின் நிறத்திற்கு மாவின் இலை நிறமும்
பொன்நிறமும், மணி நிறமும் உவமையாகப் பேசப்பெற்றுள. இவை யாவும்
செந்நிறமே. ஈது உணராது குறை கூறிய புலவர்களும் உளர்.           (82)

5427.

‘சூடையின்மணி கண் மணி ஒப்பது, தொல் நாள்
ஆடையின்கண்இருந்தது, பேர் அடையாளம்;
நாடி வந்து எனதுஇன் உயிர் நல்கினை, நல்லோய் !
கோடி’ என்றுகொடுத்தனள், மெய்ப் புகழ்
                            கொண்டாள்.

     மெய்ப்புகழ்கொண்டாள் - உண்மையான புகழைப்பெற்ற பிராட்டி;
(அனுமனை நோக்கி) நாடிவந்து - விருப்பத்துடன் வந்து; எனது இன்உயிர்
நல்கினை -
என்னுடைய இனிய உயிரை