பக்கம் எண் :

472சுந்தர காண்டம்

வழங்கினாய்; நல்லோய் - சிறந்தவனே (இஃது); சூடையின்மணி -
சூடாமணியாகும்; கண்மணி ஒப்பது - என்னுடைய கண்ணின் மணி போன்
றது;தொல் நாள் - நீண்ட நாட்களாக; ஆடையின் கண் இருந்தது -
என்னுடைய ஆடையில் பொதிந்து வைக்கப் பெற்றது; பேரடையாளம் -
பெரிய அடையாளமாகும்; கோடி - (இதனை) கொள்வாயாக; என்று - என்று
கூறி (சூடாமணியை; கொடுத்தனள் - (அனுமனிடம்) வழங்கினாள்.

     சூடாமணி என்பதுநடுவே ரத்தினம் பதிந்த வில்லை என்று திரிசிரபுரம்
மாகவித்துவான் வி. கோவிந்தப் பிள்ளை வரைந்தார். சூடா என்னும் வடசொல்
சூடை என்று வந்தது. உறுசுடர்ச் சூடைக் காசுக்கு அரசினை’ என்று பின்பு
பேசப் பெறும் (கம்ப. 5473)                                  (83)

சூடாமணி பெற்றஅனுமன் செல்லுதல்.

5428.

தொழுதுவாங்கினன்; சுற்றிய தூசினன், முற்றப்
பழுது உறாவகைபந்தனை செய்தனன்; வந்தித்து,
அழுது, மும்மை வலம் கொடு இறைஞ்சினன்;
                                அன்போடு,
எழுது பாவையும்,ஏத்தினள்; ஏகினன் இப்பால்.

(அனுமன் சூடாமணியை)

     தொழுதுவாங்கினன் - கை கூப்பிப் பெற்று; சுற்றிய தூசினன் -
உடுத்திருந்த ஆடையிலே; முற்ற - நன்றாக; பழுது உறா வகை - தவறிப்
போகாதபடி; பந்தனை செய்தனன் - முடித்து வைத்துக் கொண்டு (அனுமன்);
வந்தித்து - (பிராட்டியை) வணங்கி; அழுது - அழுது; மும்மை வலங்கொடு
-
மூன்று முறை வலஞ் செய்து; இறைஞ்சினன் - (பிராட்டியின் திருவடியில்)
பணிந்தான்; (அது கண்ட பிராட்டி) அன்போடு - அன்புடன்; எழுது
பாவையும் -
எழுதப் பெற்ற பாவை போன்ற பிராட்டியும்; ஏத்தினள் -
வாழ்த்தினள்; (அனுமன்) இப்பால் ஏகினன் - இப்புறம் சென்றனன்.

     சூடாமணி தவறிப்போகாதபடி ஆடையில் முடிந்து வைத்துக்
கொண்டான். வந்தித்தல் - வணங்குதல். திருமால் திருவடியே வந்தித்து என்
நெஞ்சமே வாழ்த்து (மூன்றாம் திருவந்தாதி 95) இப்பால் ஏகினள் என்று
மாற்றுக. இனி மாற்றாது ஏகினன் என்பதை முற்றாக்கிவிட்டு இப்பால்
என்பதற்கு இதற்குப் பிறகு என்று எச்சம் ஆக்குவர். அவர்கள் ‘சோலை எய்தி
இருந்தனன் இராமன். இப்பால்’ (கம்ப. 7238) என்னும் சூர்ப்பணகைப்
படலத்தை மேற்கோள் காட்டுவர்.                              (84)