பக்கம் எண் :

பொழில் இறுத்த படலம்505

     பார் இடுபழுவச் சோலை பாலிக்கும் பருவத் தேவர் - பூமியின்
ஒரு பகுதியாகிய இலங்கையில் அடர்த்தியாக வளர்ந்துள்ள
பெருஞ்சோலையைப் பாதுகாக்குகின்ற ஆறு பருவங்கட்கும் உரிய தேவர்கள்;
அச்சம் நெருப்பு இடு நெஞ்சர் -
பயமாகிய நெருப்பு மூளப்பெற்ற
மனமுடையவர்களாகவும்; நீர் இடு துகிலர் - (அதனால்) சிறுநீரைவிட்டுக்
கொண்ட ஆடையை உடையவர்களாகவும்; நெக்குப் பீர் இடும் உருவர் -
உடல் நெகிழ்ந்து இரத்தம் பெருக்கெடு்த்து ஓடும் உருவம்
உடையவர்களாகவும்; தெற்றிப் பிணங்கிடுதாளர் - நடக்க முடியாமல்
ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்ட கால்களை உடையவர்களாகவும்; பேழ்
வாய் ஊர் இடு பூசல் ஆர உளைத்தனர் -
தமது திறந்த வாய்களாகிய
ஊரினர் செய்கின்ற ஆரவாரம் நிறையும்படி ஊளையிட்டவர்களுமாகி; ஓடி
உற்றார் -
ஓடி இராவணனிடம் போய்ச் சேர்ந்தனர்.

     பருவத் தேவர்,துகிலர், நெஞ்சர், உருவர் தாளராய் ஓடியுற்றார். இது,
இவர்கள் கொண்ட அச்சத்தையும் மெய்ப்பாடுகளையும் காட்டுகின்றது.
இராவணது ஆணைக்கு அடங்கி, சோலையைக் காத்து வந்தனர் இவர்கள்.
இப்போது அனுமனது செயல்களைக் கண்டு அஞ்சி இராவணனிடம்
ஓடுகின்றனர். பழுவம் - அடர்த்தி; பழுவச் சோலை - ஒருபொருட் பன்மொழி
எனினும் அமையும்.                                          (55)

5484.

அரி படுசீற்றத்தான்தன் அருகு சென்று, அடியின்
                                    வீழ்ந்தார்;
‘கரி படு திசையின் நீண்ட காவலாய் ! காவல்
                                  ஆற்றோம் !
கிரி படு குவவுத் திண் தோள் குரங்கு இடை
                                 கிழித்து வீச,
எரி படுதுகிலின், நொய்தின் இற்றது கடி கா’
                                  என்றார்.

     அரி படுசீற்றத்தான் தன் அருகு சென்று அடியில் வீழ்ந்தார் -
சிங்கத்தினிடம் உண்டாகும் கோபத்தை உடைய இராவணன் பக்கம் சென்று
அவன் பாதங்களில் விழுந்த பருவத் தேவர், (அவனை நோக்கி); கரிபடு
திசையின் நீண்ட காவலாய் -
திக்கயங்கள் வாழ்கின்ற திக்குகளின் எல்லை
வரையிலும் நீண்டு பரந்த ஆட்சியை உடையோய்!;  காவல் ஆற்றோம் -
(இப்போது) சோலையைப் பாதுகாக்கும் ஆற்றல் இழந்தோம்; கிரி