பக்கம் எண் :

508சுந்தர காண்டம்

புகழ்வது - பூமியை அல்லவாபுகழ வேண்டியது!; அகுரங்கை - அந்தக்
குரங்கை; புலவர் போற்றும் - தேவர்கள் வாழ்த்துகின்ற; மூவரின் ஒருவன்
-
மும்மூர்த்திகளில் ஒருவனே; என்று புகல்கினும் - என்று சொல்வதும்;
முடிவுஇலாத ஏவம் - முடிவிலாத குற்றமாகும்; ஐய - ஐயனே!; இன்னே
காணுதி -
இப்போதே காண்பாய்; என்றார் - என்று சொன்னார்கள்.

     அக் குரங்கின்வடிவைச் சுமக்கும் திண்மை உடைய பூமி
புகழ்வதற்குரியது. தேவர்கள் வாழ்த்தும் மும்மூர்த்திகளுள் ஒருவன் அனுமன்
என்று கூறினும் குற்றம். புலவர் - தேவர் ஏவம் - குற்றம்.            (59)

அனுமன் ஆரவாரம்

5488.

மண்தலம்கிழிந்த வாயில் மறி கடல் மோழை மண்ட,
எண் திசை சுமந்தமாவும், தேவரும் இரியல்போக,
தொண்டை வாய்அரக்கிமார்கள் சூல் வயிறு
                             உடைந்து சோர,
‘அண்டமும்பிளந்து விண்டது ஆம்‘என, அனுமன்
                            ஆர்த்தான். 

     அனுமன் - அசோகவனத்தில் நின்ற அனுமன்; மண் தலம் கிழிந்த
வாயில் -
பூமி பிளந்த வழியில்; மறிகடல் மோழை - அலைகள் மடங்கி
வீசும் கடலின் நீர் கீழாறாகப் (பாய்ந்து); மண்ட - நெருங்கவும்; எண் திசை
சுமந்த மாவும் -
எட்டுத் திக்குகளிலும் நின்று பூமியைச் சுமக்கின்ற
யானைகளும்; தேவர்களும் இரியல் போக - திக்குப் பாலகர்களும் அஞ்சி
ஓடவும்; தொண்டை வாய் அரக்கிமார்கள் - கொவ்வைக் கனி போன்ற
சிவந்த அதரங்களை உடைய அரக்கியர்கள்; வயிறு சூல் உடைந்து சோர -
வயிற்றில் உள்ள கருச்சிதைந்து தளரவும்; அண்டமும் பிளந்து விண்டது
ஆம் என -
இந்த உலக உருண்டையே வெடித்து பிளவு பட்டது என்று
கூறும்படியும்; ஆர்த்தான் - ஆரவாரம் செய்தான்.

     அனுமன் இவ்வாறுஆர்ப்பாட்டம் செய்வதற்கு அரக்கர்களைப்
போருக்கு இழுப்பதே நோக்கமாகும். படலத்தின் தொடக்கத்தில் இந்த
நோக்கம் (5434) சுட்டப்பட்டுள்ளது. மோழை - கீழாறு; குமிழியும் ஆம்.
‘அண்டம் மோழை எழ’ (திருவாய் 7-4-1) சூல் வயிறு - கருவுற்றவயிறு;
பெருத்த வயிறும் ஆம்.                                    (60)