பக்கம் எண் :

கிங்கரர் வதைப் படலம்511

     அரக்கவீரர்கள், கையில் ஏந்திய ஆயுதங்களின் பெயர்கள் வரிசைப்
படுத்தப்பட்டுள்ளன. பரித்தல் - தாங்குதல்; ‘பரித்த காவினர்’ (கம்ப. 768) (3)

5492.

‘நானிலம்அதனில் உண்டு போர்’ என நவிலின், அச்
                                   சொல்,
தேனினும்களிப்புச் செய்யும் சிந்தையர், தெரித்தும்
                                   என்னின்,
கானினும்பெரியர்; ஓசை கடலினும் பெரியர்; கீர்த்தி
வானினும்பெரியர்; மேனி மலையினும் பெரியர்
                                   மாதோ !

     நானிலம் அதனில்போர் உண்டு என நவிலின் - இந்நிலவுகில்
போர்நிகழும் என்று சொன்ன அளவில்; அச்சொல், தேனினும் களிப்பு
செய்யும்சிந்தையர் -
அந்த வார்த்தை, தேனைவிட மிக்க சுவையை
உண்டாக்கும்மனத்தினர்; தெரித்தும் என்னின் - (அன்னவர் தன்மையை)
அறிவிப்போம்என்றால்; கானினும் பெரியர் - (நெருக்கம் பரப்பு
முதலியவற்றால்) காட்டைவிடப் பெரியவர்; மேனி மலையினும் பெரியர் -
உடல் தோற்றத்தில்மலையை விடப் பெரியவர்கள்.

     அவ்வரக்கரின்பரப்பு முதலியவற்றிற்கு காடு முதலிய உலகப் பெரும்
பொருளே உவமையாகா என்றால், வேறு உவமைப் பொருள்களை எங்கே
தேடுவது என்க. பெரியர் என்ற சொல் பல முறை வந்தது சொற்பொருட்
பின்வருநிலையணி. மாது - ஓ - அசைநிலைகள்                   (4) 

5493.

திருகுறும்சினத்து, தேவர், தானவர், என்னும்
                             தெவ்வர்
இரு குறும்புஎறிந்து நின்ற இசையினார் வசை
                             என்று எண்ணி,
‘பொரு குறும்புஏன்று, வென்று புணர்வது, பூ உண்
                             வாழ்க்கை
ஒரு குறுங் குரங்கு!’ என்று எண்ணி, நெடிது நாண்
                             உழக்கும் நெஞ்சர்;

     திரு குறும்சினத்து - முரண் கொண்டகோபத்தை உடைய; தேவர்,
தானவர் என்னும் தெவ்வர்  -
தேவர்கள் அசுரர்கள் என்று