பக்கம் எண் :

கிங்கரர் வதைப் படலம்513

 

யானையும்பிடியும் வாரி இடும் பில வாயர்; ஈன்ற
கூனல் வெண்பிறையின் தோன்றும் எயிற்றினர்;
                        கொதிக்கும் கண்ணர்;

     வானவர் எறிந்ததெய்வ அடுபடை வடுக்கள் - தேவர்கள் தம் மீது
வீசி எறிந்த தெய்வத்தன்மை உள்ள, கொல்ல  வல்ல ஆயுதங்களால்
உண்டான தழும்புகள்; மற்றை தானவர் துரந்த ஏதி தழும் பொடு தயங்கு
ம்தோளர் -
தேவரின் வேறான அசுரர்கள் போரில் தூண்டிய
ஆயுதங்களால்உண்டான தழும்புகளோடு விளங்குகின்ற தோள்களை
உடையவர்கள்;யானையும் பிடியும் வாரி இடும் பில வாயர் - ஆண்
யானையையும்பெண்யானையையும் வாரி உண்ணுகின்ற குகை போன்ற
வாயினைஉடையவர்கள்; ஈன்ற கூனல் வெண் பிறையின் தோன்றும்
எயிற்றினர் -
புதிதாகத் தோன்றிய வளைந்த வெண்மையான பிறைச் சந்திரன்
போன்றுகாணப்படுகின்ற பற்களை உடையவர்கள்; கொதிக்கும் கண்ணர் -
கோபத்தால் பொங்கும் கண்களை உடையவர்கள்.

     ஏதி - ஆயுதம்;எயிறு - பல்.                              (7)

5496.

சக்கரம்,உலக்கை, தண்டு, தாரை, வாள், பரிகம்,
                                    சங்கு,
முற்கரம் முசுண்டி,பிண்டிபாலம், வேல், சூலம்,
                                    முட்கோல்,
பொன் கரக்குலிசம், பாசம், புகர் மழு, எழு பொன்
                                    குந்தம்,
வில், கருங் கணை, விட்டேறு, கழுக்கடை, எழுக்கள்
                                    மின்ன;

     சக்கரம் உலக்கை - சக்கராயுதங்களும்உலக்கைகளும்; தாரை வாள்
-
கூர் நுனியை உடையவாளாயுதங்களும்; பரிசும், சங்கு - இருப்பு
வளைதடிகளும் சங்கங்களும்; முற்கரம், முசுண்டி - சம்மட்டிகளும் முசுண்டி
என்னும் ஆயுதங்களும்; பிண்டி பாலம் - எறியீட்டிகளும்; வேல், சூலம்,
முள்கோல் -
வேல்களும், சூலங்களும் முட்கோல்களும்; பொன் கரம்
குலிசம் -
அழகிய ஒளி வீசுகின்ற வச்சிராயுதங்களும்; பாசம், புகர்மழு -
கயிற்றின் வடிவான ஆயுதங்களும், ஒளியுள்ள மழுக்களும்; எழு பொன்
குந்தம் -
மேலெழுந்து தோன்றுகின்ற அழகிய ஈட்டிகளும்; வில், கருங்கணை
-
வில்லும் பெரிய அம்புகளும்; விட்டேறு - வீசி