பக்கம் எண் :

514சுந்தர காண்டம்

எறிதற்குரிய விட்டேறுஎன்னும் ஆயுதங்களும்; கழுக் கடை எழுக்கள் - கூர்
நுனியை உடைய இரும்புத் தடிகளும்; மின்ன - ஒளிவிட.                         

     முடுகுகின்றார்என்று அடுத்த கவியோடு தொடரும்,            (8)

5497.

பொன் நின்று கஞலும் தெய்வப் பூணினர்;
                         பொருப்புத் தோளர்;
மின் நின்றபடையும், கண்ணும், வெயில் விரிக்கின்ற
                         மெய்யர்;
‘என் ?’ என்றார்க்கு, ‘என் ? என் ?’ என்றார்
                       எய்தியது அறிந்திலாதார்;
முன் நின்றார்முதுகு தீய, பின் நின்றார்
                        முடுகுகின்றார்.

     பொன்நின்றுகஞலும் - அழகு நிலை பெற்று விளங்கும்; தெய்வப்
பூணினர் -
தெய்வத்தன்மையுள்ள அணிகளை உடையவர்; பொருப்புத்
தோளர் -
மலை போன்ற தோள்களை உடையவர்; மின் நின்ற படையும்
கண்ணும், வெயில் விரிக்கின்ற மெய்யர் -
ஒளி பொருந்திய
ஆயுதங்களையும் கண்களையும் வெயில் போல ஒளி பரப்பப் பெற்ற
உடல்களையும் உடையவர்; என் என்றார்க்கு - (அவர்கள்) ஏன் போவது
தடைப்படுகின்றது என்று தம் முன் நின்றவர்களைக் கேட்டவர்க்கு; எய்தியது
அறிந்திலாதார் -
அவர்கள் போகமுடியாமல் நெருக்கத்தால் தடையுற்றதை
அறியாதவர்களாகி; முன் நின்றார் முதுகு தீய - தம் முன்னே
நின்றவர்களுடைய முதுகுகள், அவர்களது மூச்சுக் காற்றால் தீப்பட்டன போல
சூடுகொள்ள; என் என் என்றார் முடுகின்றார் - என்ன என்ன என்று
விரைந்து வினவுபவராய் விரைபவரானார்கள்.

     என் என்என்றார்; அடுக்கு விரைவுப் பொருளது.             (9)

5498.

வெய்துறுபடையின் மின்னர்; வில்லினர்; வீசு காலர்;
மையுறு விசும்பின்தோன்றும் மேனியர்; மடிக்கும்
                              வாயர்;
கை பரந்து உலகுபொங்கிக் கடையுகம்
                             முடியும்காலை,
பெய்ய என்றுஎழுந்த மாரிக்கு உவமை சால்
                             பெருமை பெற்றார்.