பக்கம் எண் :

542சுந்தர காண்டம்

    நல் அறவீரன் - சிறந்த தரும வீரனான  அனுமன்; பெயர்க்கும்
சாரிகை -
இடம் விட்டு விரைந்து செல்வதற்குரிய சாரிகைத் தொழிலில்;
கறங்கு என திசை தொறும் பெயர் வின் -
காற்றாடி போல எட்டுத்
திக்குகளிலும் பெயர்ந்து செல்வதாலும்; உயர்க்கும் விண்மிசை ஓங்கலின் -
ஓங்கிய ஆகாயத்தின் மீது உயரச் செல்வதாலும் ; மண்ணின் வந்து உறலின்
-
தரையில் வந்து பொருந்துவதாலும்; அரக்கராய் உள்ளார் அயர்த்து
வீழ்ந்தனர் அழிந்தனர் -
இராக்கதர்கள் சோர்ந்து வீழ்ந்து அழிந்தார்கள்;
மிசை வெயர்த்திலன் உயிர்த்திலன் -
(ஆனால் அந்த அனுமனோ)
தன்னுடம்பில், வேர்த்தல் தானும் கொண்டிலன்; பெருமூச்சு விடுதல்
செய்தானும் அல்லன்.

    சாரிகை - வட்டமாய் ஓடித் திரிதல். அனுமன் அரக்கர்களை
அழிப்பதற்குச் சிறிதும் சிரமப்படவில்லை என்பது கருத்து.           (53)

5542.

எஞ்சல்இல் கணக்கு அறிந்திலம்; இராவணன் ஏவ,
நஞ்சம்உண்டவராம் என அனுமன்மேல் நடந்தார்;
துஞ்சினார் அல்லது யாவரும் மறத்தொடும்
                             தொலைவுற்று,
எஞ்சினார்இல்லை; அரக்கரின் வீரர் மற்று யாரே ?

     இராவணன் ஏவ -இராவணன்கட்டளை இட்டு அனுப்ப; நஞ்சம்
உண்டவராம் என அனுமன் மேல் நடந்தார் -
விடத்தை அருந்தியவர்கள்
போன்று அனுமன் மீது போருக்குச் சென்ற அந்த அரக்கர்களின்; எஞ்சல்
இல் கணக்கு அறிந்திலம் -
குறைவு படாத கணக்கு இவ்வளவு என்று யாம்
அறிந்தோம் இல்லை; யாவரும் துஞ்சினார் அல்லது - (ஆனால்) எல்லா
அரக்கரும் (எதிர்த்துப் போர் செய்து) இறந்தார்களே அல்லாமல்; மறத்
தொடும்தொலைவுற்று எஞ்சினார் இல்லை -
வீரத்தில் குறைந்து
தோற்றமையால்எஞ்சியவர்கள் எவரும் இல்லை; அரக்கரில் வீரர்
மற்றுயாரே ? -
(ஆதலால்) அந்த அரக்கர்களைப் போலச் சிறந்த போர்
வீரர்கள் வேறு யாரேஉளர் ? (ஒருவரும் இல்லை).

     அனுமன் மீதுபோருக்குச் சென்ற அரக்கர்களின் வீரத்தைக் கவிஞர்
பாராட்டுவதாக அமைந்தது இக்கவிதை.                         (54)

கிங்கரர்மடிந்ததைக் காவலர் இராவணனுக்குத் தெரிவித்தல்

5543.

வந்தகிங்கரர் ‘ஏ’ எனும் மாத்திரை மடிந்தார்;
நந்தவானத்துநாயகர் ஓடினர், நடுங்கி,