பக்கம் எண் :

கிங்கரர் வதைப் படலம்545

அவிந்தனர் என்றார் -அந்தக்குரங்கினால் போரில் அழிந்து ஒழிந்தனர்
என்று கூறினார்.

    ‘புலம் தெரிபொய்க் கரி புகலும் புன் கணார் குலங்கள் ஒழிதல்’ -
உவமை. ஒழுக்கத்தை வற்புறுத்துவது. (58)

இராவணன் மீட்டும்வினாவுதல் 

5547.

ஏவலின்எய்தினர் இருந்த எண் திசைத்
தேவரைநோக்கினான், நாணும் சிந்தையான்;
‘யாவது என்றுஅறிந்திலிர் போலுமால் ?’ என்றான்-
மூவகை உலகையும்விழுங்க மூள்கின்றான்.

     மூவகை உலகையும்விழுங்க மூள்கின்றான் - மேல் கீழ் நடு என்ற
மூன்று உலகங்களையும் விழுங்குவான் போன்று சினத்தால் மிக்க இராவணன்;
ஏவலின் எய்தினர் இருந்த எண் திசைத் தேவரை நோக்கினான் -
தன்
கட்டளையால் வந்தவர்களாய் அருகே நின்று கொண்டிருந்த எட்டுத் திக்குப்
பாலர்களைப் பார்த்து; நாணும் சிந்தையான் - மிகவும் வெட்கம் கொண்ட
மனமுடையவனாகி; யாவது என்று அறிந்திலிர் போலும் என்றான் -
(பருவத்தேவர்களைப் பார்த்து) என்ன நடந்தது என்றே தெரிந்து
கொள்ளவில்லை போலும் என்று அதட்டிக் கூறினான்.              (59)

5548.

மீட்டுஅவர் உரைத்திலர்;பயத்தின் விம்முவார்;
தோட்டு அலர் இனமலர்த் தொங்கல் மோலியான்,
‘வீட்டியது அரக்கரை என்னும் வெவ் உரை,
கேட்டதோ ?கண்டதோ ? கிளத்துவீர்’ என்றான்.

     அவர் மீட்டுஉரைத்திலர் - அந்த வனத்து நாயகர்,மறுமொழி
கூறாதவர்களாய்; பயத்தின் விம்முவார் - அச்சத்தினால்
நடுங்குபவரானார்கள்; தோடு அலர் இனம் மலர் தொங்கல் மோலியான் -
இதழ்களோடு விரிந்த பலவகை மலர்களால் தொடுத்த மாலையணிந்த முடிகளை
உடைய இராவணன்; அரக்கரை வீட்டியது என்னும் வெவ் உரை - (அந்தக்
குரங்கு) அரக்க வீரரைக் கொன்று விட்டது என்ற கொடிய வார்த்தை;
கேட்டதோ ? கண்டதோ ? கிளத்துவீர் என்றான் - நீங்கள் கேட்டுச்
சொன்னதா ? அன்றி, பார்த்துச் சொன்னதா ? சொல்லுங்கள் என்று மீட்டும்
கேட்டான்.                                              (60)