பக்கம் எண் :

546சுந்தர காண்டம்

காவலர்,‘கண்களால் கண்டனம்’ என்றல்.

5549.

‘கண்டனம்,ஒருபுடை நின்று, கண்களால்;
தெண் திரைக்கடல் என வளைந்த சேனையை,
மண்டலம்திரிந்து, ஒரு மரத்தினால், உயிர்
உண்டது, அக்குரங்கு; இனம் ஒழிவது அன்று’
                                 என்றார்.

     ஒரு புடை நின்றுகண்களால் கண்டனம் - நாங்கள் ஒருபக்கத்தில்
மறைந்து நின்று எங்கள் கண்களால் நேரில் பார்த்தோம்; தெண் திரை கடல்
என வளைந்த சேனையை-
தெளிந்த அலைகளை உடைய கடல் போலப்
பரந்து சூழ்ந்திருந்த அரக்கர் சேனையை;  அகுரங்கு - அந்தக் குரங்கானது;
மண்டலம் திரிந்து -
எப்புறத்தும் வளைந்து சுழன்று சுழன்று சஞ்சரித்ததாகி;
ஒரு மரத்தினால் உயிர் உண்டது - ஒரு மரத்தினாலே தாக்கி, அரக்கர்
களின்உயிரை வாங்கி விட்டது; இனம் ஒழிவது அன்று என்றார் -
அது,அவ்விடத்தை விட்டு இன்னும் நீங்கிப் போகவில்லை என்று கூறினார்கள்.

    ‘கண்டனன்கற்பினுக்கு அணியைக் கண்களால்’ (6031) என்ற இடத்தும்
இங்கும் வந்த சொல்நடை ஒன்றே; ஆயினும் சூழ்நிலையால் இங்கே அவலம்,
அங்கே களிப்பு. இரு வகையான உணர்வுகளின் அழுத்தத்தை ஒரே நடையால்
உணர்த்திடும் திறனை மனங்கொள்க.                           (61)