8.சம்புமாலிவதைப்படலம் அனுமனைப் பற்றிக்கொணருமாறு இராவணன் சம்புமாலி என்பவனுக்கு ஆணையிட்டான். ஆணையை ஏற்றுச் சென்று போரிட்ட சம்புமாலியின் வதையைப் பற்றிக் கூறுவது இந்தப் படலம். இராவணன் ஆணை அறுசீர் ஆசிரியவிருத்தம் 5550. | கூம்பினகையன், நின்ற குன்று எனக் குவவுத் திண் தோள், பாம்பு இவர்தறுகண், சம்புமாலி என்பவனைப் பாரா, ‘வாம் பரித்தானையோடு வளைத்து, அதன் மறனை மாற்றி, தாம்பினின்பற்றி, தந்து, என் மனச் சினம் தணித்தி’ என்றான். |
கூம்பினகையன் -குவித்துவணங்கிய கைகளை உடையவனாய்; நின்றகுன்று என குவவு திண்தோள் - தனக்கு அருகில் நின்ற மலைபோல் திரண்ட வலிய தோள்களையும்; பாம்பு இவர் தறுகண் சம்புமாலி என்பவனைப் பாரா - பாம்பை ஒத்த அஞ்சாமையையும் கொண்ட சம்புமாலி என்னும் அரக்கனைப் பார்த்து; வாம் பரித் தானையோடு வளைத்து - தாவிச் செல்லும் குதிரைப் படைகளோடு சென்று அந்தக் குரங்கை வளைத்து; அதன் மறனை மாற்றி - அதன் வலிமையை அடக்கி; தாம்பினின் பற்றி தந்து - கயிற்றினால் கட்டி என்னிடம் கொண்டு வந்து விட்டு; என் மனம் சினம் - என் மனத்தில் உள்ள கோபத்தை; தணித்தி என்றான் - ஆற் றுவாய்என்று இராவணன் கூறினான். (1) சம்புமாலிபோருக்குப் புறப்படுதல் 5551. | ஆயவன்வணங்கி, ‘ஐய ! அளப்பரும் அரக்கர் முன்னர், “நீஇது முடித்தி”என்று நேர்ந்தனை; நினைவின் எண்ணி |
|