அனுமன் கை எழுவைச்சம்புமாலி அறுத்து வீ்ழ்த்தல் 5595. | முற்ற முனிந்தான் நிருதன்; முனியா, முன்னும் பின்னும் சென்று உற்ற பகழிஉறாது, முறியா உதிர்கின்றதை உன்னா, சுற்றும் நெடுந்தேர்ஓட்டித் தொடர்ந்தான்; தொடரும் துறை காணான்; வெற்றி எழுவைமழுவாய் அம்பால் அறுத்து வீழ்த்தினான். |
நிருதன் முற்றமுனிந்தான் - சம்புமாலி என்ற அந்தஅரக்கன் மிகவும்கோபித்தான்; முனியா - அவ்வாறு கோபித்து; முன்னும் பின்னும் சென்றுஉற்ற பகழி - முன்னாகவும் பின்னாகவும் பொருந்தச் சென்று போயடைந்தஅம்புகள்; உறாது - அனுமன் மேல்தாக்காமல்; முறியா உதிர் கின்றதைஉன்னா - முறிந்து கீழே சிந்தி விழுகின்றதை நினைத்து; சுற்றும் நெடுந்தேர் ஒட்டித் தொடர்ந்தான் - (அனுமனைச்) சுற்றிலும் (தனது) பெரிய தேரைச்செலுத்தி நெருங்கப் பார்த்து; தொடரும் துறை காணான் - (அவனை)நெருங்கிச் செல்லும் வழியைப் பெறாமல்; வெற்றி எழுவை - இதுவரைவெற்றியைத் தந்த எழு என்னும் படையை; மழுவாய் அம்பால் அறுத்துவீழ்த்தினான் - மழுப் போன்ற நுனியை உடைய அம்பினால் அறுத்துத்தள்ளினான். (46) சம்பு மாலியைஅனுமன் கொல்லுதல் 5596. | சலித்தான்ஐயன்; கையால், எய்யும் சரத்தை உகச் சாடி, ஒலித் தார்அமரர் கண்டார் ஆர்ப்ப, தேரினுள் புக்கு, கலித்தான்சிலையைக் கையால் வாங்கி, கழுத்தினிடை இட்டு வலித்தான், பகுவாய் மடித்து மலைபோல் தலை மண்ணிடை வீழ. |
ஐயன் சலித்தான்- அனுமன்(தன் கையிலிருந்த எழு அறுத்து வீழ்த்தப்பட்டதனால்) சிறிது சலிப்படைந்து; கையால் எய்யும் சரத்தை உகச் சாடி - (உடனே) சம்புமாலி தன்மீது எய்கின்ற அம்புகளை எல்லாம் தன் கைகளாலேயே உதிர்ந்து போம்படி |