மோதித்தள்ளி; ஒலித்தார் அமரர் கண்டார் ஆர்ப்ப - தழைத்தலை உடைய மாலையை அணிந்த தேவர்கள் கண்டு ஆரவாரம் செய்ய; தேரினுள் புக்கு - சம்பு மாலியின் தேரினுள்ளே பாய்ந்து புகுந்து; கலித்தான் சிலையை - வீரவொலி செய்து கொண்டிருந்த அவனது வில்லை; கையால் வாங்கி பகுவாய் மடித்து - தன் கையால் எளிதில் பற்றி தன் திறந்த வாயை மடித்துக் கொண்டு; மலைபோல் தலை - மலை போன்ற அவன் தலை; மண் இடை வீழ - தரையில் விழுமாறு; கழுத்திடை இட்டு வலித்தான் - அவனது கழுத்திலே மாட்டி இழுத்தான். ஒலித்தல் -தழைத்தல்; ‘ஒலி கொண்டு’ - ஒலி - தழைத்தல்; ‘ஒலி தெங்கு’ (பதிற் - 13) போல. (47) 5597. | குதித்து,தேரும், கோல் கொள் ஆளும், பரியும், குழம்பு ஆக மிதித்து,பெயர்த்தும், நெடுந் தோரணத்தை வீரன் மேற்கொண்டான்; கதித் துப்புஅழிந்து கழிந்தார் பெருமை கண்டு, களத்து அஞ்சி, உதித்துப்புலர்ந்த தோல்போல் உருவத்து அமரர் ஓடினார். |
வீரன் குதித்து -அனுமன்தேரினின்றும் கீழே குதித்து; தேரும் கோல்கொள் ஆளும் - சம்பு மாலியின் தேரும், அதனை ஓட்டும் கோலைக் கொண்டு செலுத்தும் தேர்ப்பாகனும்; பரியும், குழம்பு ஆகமிதித்து - தேரில் பூட்டிய குதிரைகளும் குழம்பு போல இளகி ஓடத் தன் கால்களால் மிதித்து அழித்துவிட்டு; பெயர்த்தும் - மீண்டும்; நெடுந்தோரணத்தை மேற்கொண்டான் - தான் முன்னிருந்த நெடிய தோரண வாயிலின் மீது ஏறிக் கொண்டான்; உதித்துப் புலர்ந்த தோல் போல் உருவத்து அமரர் - பருத்துக் காய்ந்து போன தோல் போன்ற உருவத்தை உடைய பருவத் தேவர்கள்; கதித்துப்பு அழிந்து கழிந்தார் - விரைவுள்ள (தமது) வலிமை யழிந்து இறந்து போன; பெருமை கண்டு - அரக்கரது பெருந் தொகையைப் பார்த்து; அஞ்சி - (இச் செய்தியை இராவணனிடம் சொல்ல வேண்டுமே என்று) பயந்து; களத்து ஓடினார் - போர்க்களத்தினின்றும் இராவணன் அரண்மனையை நோக்கி விரைந்து ஓடினார். |