வீரன் குதித்து,தேர், ஆள், பரி குழம்பாக மதித்து பெயர்த்தும் நெடுந் தோரணத்தை மேற் கொண்டான். ஏற்கனவே இறந்தவர்களின் பெருந் தொகை கண்டு, அஞ்சி காவல் அமரர் இராவணனிடம் சொல்வதற்கு ஓடினார்கள். காற்றை உட்கொண்டு பருத்தும், பின் சிறுத்தும் மாறும் துருத்தித் தோல், காவலில் குறையற்ற போது பருத்தும், குறையுற்றபோது தளர்ந்தும் போகின்ற காவல் தேவர்களுக்கு உவமை ஆயிற்று. (48) 5598. | பரிந்துபுலம்பும் மகளிர் காண, கணவர் பிணம் பற்றி, விரிந்த குருதிப்பேராறு ஈர்த்து மனைகள்தொறும் வீச, இரிந்ததுஇலங்கை; எழுந்தது அழுகை; ‘இன்று, இங்கு, இவனாலே சரிந்தது,அரக்கர் வலி’ என்று எண்ணி, அறமும் தளிர்த்ததால். |
விரிந்த குருதிபேர் ஆறு - பரந்த இரத்தவெள்ளமாகிய பெரிய ஆறு; பிரிந்து புலம்பும் மகளிர் காண - தம் கணவர் இறந்தமையால் இரங்கிப் புலம்பும் பெண்கள் காணுமாறு; கணவர் பிணம் பற்றி ஈர்த்து மனைகள் தொறும் வீச - அவரவர் கணவர்களுடைய பிணங்களைப் பிடித்து இழுத்து வந்து அவரவர் வீடுகள் தோறும் கொண்டு வந்து வீச; இலங்கை இரிந்தது - (அதைக் கண்ட) இலங்கை நகரம் நிலை குலைந்து அலைந்தது; அழுகை எழுந்தது - அழுகைக் குரல் எங்கும் மேலோங்கியது; இன்று இங்கு இவனாலே - இன்றைய தினம், இந்த இலங்கையில் இந்தக் குரங்கினால்; அரக்கர் வலி சரிந்தது என்று எண்ணி - அரக்கர்களுடைய வலிமை அழிந்தது என்று நினைத்து; அறமும் தளிர்த்தது - அறக்கடவுளும் மனம் களித்தது. (49) காவல் தேவர்இராவணனிடம் செய்தி கூறுதல் 5599. | புக்கார் அமரர், பொலந் தார் அரக்கன் பொரு இல் பெருங் கோயில் விக்காநின்றார்; விளம்பல் ஆற்றார்; வெருவி விம்முவார்; |
|