| நக்கான் அரக்கன்; ‘நடுங்கல்’ என்றான்;‘ஐய ! நமர் எல்லாம் உக்கார்;சம்புமாலி உலந்தான்; ஒன்றே குரங்கு’ என்றார். |
அமரர் - செய்தி சொல்லவேண்டிய பருவத் தேவர்கள்; பொலம் தார் அரக்கன் பொரு இல் பெருங் கோயில் புக்கார் - பொன்னாலான மாலைஅணிந்த அரக்கனான இராவணனுடைய ஒப்பற்ற பெரிய அரண்மனையில்புகுந்து; விளம் பல் ஆற்றார் - செய்தி சொல்வதற்கு வாயெழாமல்; விக்காநின்றார் - விக்கி விக்கி நின்று; வெருவி விம்முவார் - அஞ்சி நடுங்குவாரானார்கள்; அரக்கன் - அது கண்ட இராவணன்; நக்கான் -சிரித்து; நடுங்கல் என்றான் - நடுங்காதீர் என்று கூறினான்; ஐய ! - (பின்புஅவர் இராவணனை நோக்கி) ஐயனே !; நமர் எல்லாம் உக்கார் -நம்மவரான அரக்கர் அனைவரும் இறந்தனர்; சம்பு மாலி உலந்தான் - சம்புமாலியும் இறந்து போனான்; ஒன்றே குரங்கு என்றார் - (இவ்வளவுக்கும்அங்கு எதிர்த்துப் போர் புரிவது) ஒரே குரங்குதான் என்று கூறினார்கள்; உலந்தான் -இறந்தான். (50) அனுமனைப் பிடிக்கஇராவணனே எழுந்தபோது படைத்தலைவர்பேசுதல் 5600. | என்னும்அளவின், எரிந்து வீங்கி எழுந்த வெகுளியான், உன்ன, உன்ன,உதிரக் குமிழி விழியூடு உமிழ்கின்றான், ‘சொன்னகுரங்கை, யானே பிடிப்பென், கடிது தொடர்ந்து’ என்றான், அன்னது உணர்ந்தசேனைத் தலைவர் ஐவர் அறிவித்தார். |
என்னும் அளவின்- என்றுஅவர்கள் கூறிய அளவில்; எரிந்து வீங்கிஎழுந்த வெகுளியான் - பற்றி யெரிந்து மிகுதியாகக் கிளம்பின சினத்தைஉடைய இராவணன்; உன்ன உன்ன - (அவ்வாறு சம்பு மாலி முதலியஅரக்கர்கள் இறந்த செய்தியை) நினைக்கும் தோறும்; விழியூடு உதிரக் குமிழிஉமிழ்கின்றான் - விழிகளின் |