பக்கம் எண் :

580சுந்தர காண்டம்

வழியே இரத்தக்குமிழிகளைக் கக்கிக்கொண்டு; சொன்ன குரங்கை - நீர்
சொன்ன அந்தக் குரங்கை; யானே கடிது - நானே விரைந்து சென்று;
தொடர்ந்து பிடிப்பேன் எனறான் - பிடித்து வருவேன் என்று கூறினான்;
அன்னது உணர்ந்த சேனைத் தலைவர் ஐவர் அறிவித்தார் - அதை
உணர்ந்த படைத் தலைவர்களான ஐவர் (இராவணனிடம் பின்வருமாறு)
தெரிவிக்கலானார்கள்.

     அறிவித்ததுஅடுத்த படலத்தில் கூறப்படும். சேனைத்தலைவர் ஐவர்;-
விரூபாட்சன், யூபாட்சன்,துர்த்தரன்,பிரகசன்,பாசகர்ணன் என வான்மீகம் பெயர்
குறிப்பிடுகிறது.                                              (51)