சினர் - (சேனாபதிகள்)கைகளால் கும்பிட்டு வணங்கினர்; அரக்கனும் இசைந்தான் - இராவணனும் அதற்கு உடன்பட்டான். தமக்கு முன்அனுமனோடு போர் செய்யச் சென்றோர் வலிமை குறைந்தவர்கள் என்றும் தாங்களே அனுமனை எதிர்த்த பொழுது வெல்ல வல்லவர்கள் என்றும் பஞ்சசேனாபதிகள் கூறுகின்றனர். (4) பஞ்சசேனாபதிகளின் கட்டளைப்படி படைகள் திரளுதல் 5605. | உலகம்மூன்றிற்கும் முதன்மை பெற்றோர் என உயர்ந்தார், திலகம் மண் உறவணங்கினர்; கோயிலின் தீர்ந்தார்; ‘அலகு இல் தேர்,பரி, கரியொடு ஆள் மிடைந்த போர் அரக்கர், தொலைவு இலாதனகதுமென வருக’ எனச் சொன்னார். |
மூன்று உலகிற்கும்முதன்மை பெற்றோர் என உயர்ந்தார் - மூன்றுஉலகங்களுக்கும் தலைமை பெற்றவர் போன்று உயர்ந்தவரான பஞ்ச சேனாபதிகள்; திலகம் மண் உற வணங்கினர் - தமது நெற்றித்திலகம் தரையில் படும்படி இராவணனை நோக்கிக் கீழே விழுந்து வணங்கினார்கள்; கோயிலின் தீர்ந்தார் - (பிறகு) அரண்மனையை விட்டு வெளி வந்து; தொலைவு இலாதன - எளிதில் அழிவில்லாதனவாகிய; அலகு இல் தேர், பரி கரியொடு - அளவற்ற தேர்களும் குதிரைகளும், யானைகளும் (என்ற இச் சேனையோடு); மிடைந்த போர் அரக்கர் - நெருக்கமாக உள்ள போர் செய்யவல்ல அரக்கவீரர்கள்; கதும் என வருக எனச் சொன்னார் - விரைவாக வரக்கடவர் என்று கட்டளையிட்டார்கள். (5) 5606. | ஆனைமேல்முரசு அறைந்தனர் வள்ளுவர் அமைந்தார்; பேன வேலையின்புடை பரந்தது, பெருஞ் சேனை; சோனை மா மழைமுகில் எனப் போர்ப் பணை துவைத்த; மீன வான் இடுவில் எனப் படைக்கலம் மிடைந்த. |
|