பக்கம் எண் :

பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்585

    வள்ளுவர்அமைந்தார் - பறையறைவோராக இருந்தவர்; ஆனைமேல்
முரசு அறைந்தனர் -
யானையின் மீது ஏறிப் போர் முரசை முழக்கினர்;
பெரும் சேனை பேன வேலையில் - பெரிய அரக்கர் படைகள் நுரையை
உடைய கடலைப் போல; புடை பரந்தது - எல்லாப் பக்கங்களிலும்
பரவலாயிற்று; சோனை மா மழை முகில் என - விடாது பெரு மழை
பொழிகின்ற மேகம் போல; போர்ப் பணை துவைத்த - போர் முரசங்கள்
ஒலித்தன; மீன வான் இடு வில் என - நட்சத்திரங்கள் விளங்கும்
ஆகாயத்தில் தோன்றும் வானவில்லைப் போல; படைக்கலம் மிடைந்த -
போர்ப் படைக் கருவிகள் நெருங்கி விளங்கின.

    போர் முரசு ஒலிக்கு. மழை பொழியும் மேகமும், படைக்கலங்களுக்கு
வான வில்லும் உவமைகள். பேனம் - நுரை பணை - முரசு.         (6)

5607.

தானை மாக்கொடி, மழை பொதுத்து உயர் நெடுந்
                                   தாள,
மானம் மாற்ற அருமாருதி முனிய, நாள் உலந்து
போன மாற்றலர்புகழ் எனக் கால் பொரப் புரண்ட;
வானயாற்று வெண்திரை என வரம்பு இல பரந்த.

     மழை பொதுத்துஉயர் நெடும் தாள - மேகத்தைக் குத்
துமாறுமேலேஉயர்ந்து செல்லும் நீண்ட கால்களை உடையனவும்; வான யாற்று
வெண்திரை என வரம்பு இல பரந்த -
ஆகாய கங்கை யாற்றின் வெண்மை
நிறமுள்ள அலை போலப் பலவாக உள்ளனவுமான; தானை மாக்கொடி -
அரக்கர் சேனையில் விளங்கிய பெரிய வெண்ணிறக் கொடிகள்; மாற்ற அரு
மானம் மாருதி முனிய -
மாற்ற முடியாத பெருமை உடைய அனுமன்
கோபித்திட; நாள் உலந்து போன மாற்றலர் புகழ் என - (அதனால்)
ஆயுட்காலம் அழிந்து, வீரசுவர்க்கம் சென்ற பகைவர்களது புகழைப் போல;
கால் பொரப் புரண்ட - காற்று மோதுதலால் அசைந்தாடின.

       கால் -காற்று.                                        (7)

5608.

விரவு பொற் கழல் விசித்தனர், வெரிந் உற்று
                            விளங்கச்
சரம் ஒடுக்கினபுட்டிலும் சாத்தினர், சமையக்