பக்கம் எண் :

586சுந்தர காண்டம்

 

கருவி புக்கனர், அரக்கர்; மாப் பல்லணம் கலினப்
புரவி இட்ட;தேர் பூட்டின; பருமித்த பூட்கை.

     அரக்கர் -அந்தஇராக்கத வீரர்கள்; விரவு பொற் கழல் விசித்தனர்
-
(வீரத்துக்கு அடையாளமாகப்) பொருந்திய பொன்னால் செய்த வீரக்
கழல்களைக் காலில் கட்டி; சரம் ஒடுக்கின புட்டிலும் வெரிந் உற்று
விளங்கச் சாத்தினர் -
அம்புகளை உள்ளே கொண்ட அம்பறாத
தூணியையும்முதுகிற் பொருந்தி விளங்க அணிந்து கொண்டு; சமையக் கருவி
புக்கனர் -
நன்றாக அமையும் படிக் கவசத்தையும் பூண்டனர்; பரவி
மாப்பல்லணம்கவின இட்ட -
குதிரைகள், சிறந்த சேணங்கள் அழகாக
விளங்கஅணியப்பட்டன; தேர் பூட்டின - தேர்கள் சித்தம் செய்யப் பட்டன;
பூட்கைபருமித்த - யானைகள் அலங்கரிக்கப்பட்டவை ஆயின.

     நால்வகைச்சேனைகளும் போர்க்குக் கோலம் செய்து விட்டமை இங்குக்
கூறப் பட்டது. கருவி - கவசம்; ‘இளைஞரும் கருவி வீசினார்; (சீவக - 2214
உரை) பருமித்தல் - அலங்கரித்தல்; ‘பல்கதிர் ஆரமும் பூணும் பருமித்து’
(சீவக 2113)                                               (8)

5609.

ஆறு செய்தனஆனையின் மதங்கள்; அவ் ஆற்றைச்
சேறு செய்தனதேர்களின் சில்லி; அச் சேற்றை
நீறு செய்தனபுரவியின் குரம்; மற்று அந் நீற்றை
வீறு செய்தன,அப் பரிக் கலின மா விலாழி.

     ஆனையின்மதங்கள் ஆறு செய்தன - (போருக்குச் சென்ற)
யானைகளின் மதப் பெருக்குகள் (சென்ற இடங்களில்) ஆறுகளை
உண்டாக்கின; அவ் ஆற்றை - அந்த மதநீர் ஆற்றை; தேர்களின் சில்லி
சேறு செய்தன -
தேர்களின் சக்கரங்கள் (ஓடிச்) சேறாகக் குழப்பி விட்டன;
அச் சேற்றை - அவ்வாறு உண்டாகிய சேற்றை; புரவியின் குரம் நீறு
செய்தன -
குதிரைகளின் குளம்புகள் மிதித்துப் புழுதியாகச் செய்தன; அந்
நீற்றை -
அந்தப் புழுதியை; அப் பரிக் கலின மா விலாழி - அந்தக்
குதிரைகளின் கடிவாளம் பூண்ட வாயிலிருந்து வழிகின்ற நுரைகள்; வீறு
செய்தன -
வேறு வேறாய்ப் பிளவுபடச் செய்தன.

      வாய்நுரை - உயர்வு நவிற்சி; இவ்வருணனை பாக்களில் மிகுதி.    (9)