அரக்கிமார்கள்தமது கூந்தல் காலில் விழும்படி, விரித்துக் கொண்டு வாய்திறந்து பேரொலி எழுப்பி அழுதனர் என்பதாம். அலத்தகம் - செம்பஞ்சு; வாய்க்கும் செம் பஞ்சு பூசப் பெறுவது உண்டு ‘அம்மலாடியும் கையும் மணி கிளர் பவழவாயும்.... அலத்தகம் எழுதி விட்டாள்’ (சீவக. 2446) குண்டலக் குழை - குண்டலமாகிய குழை என இருபெயரொட்டாயிற்று. (42) 5710. | கதிர்எழுந்தனைய செந் திரு முகக் கணவன்மார் எதிர் எழுந்து,அடி விழுந்து, அழுது சோர் இள நலார் அதி நலம் கோதைசேர் ஓதியோடு, அன்று, அவ் ஊர் உதிரமும்தெரிகிலாது, இடை பரந்து ஒழுகியே ! |
கதிர் எழுந்துஅனைய செம்திருமுகக் கணவன்மார் - சூரியன் உதித்தது போன்ற சிவந்த அழகிய முகங்களை உடைய (இறந்த) தமது கணவன்மார்; எதிர் எழுந்து அடி விழுந்து - முன்னே எழுந்து போய் கால்களில் விழுந்து; அழுது சோர் இள நலார் - அழுது சோர்கின்ற இளம் பெண்களுடைய; அதிநலம் கோதை சேர் ஒதியோடு - மிக்க அழகுள்ள மாலையை அணிந்த கூந்தலுடனே; அன்று அவ்ஊர் உதிரமும் - அப்பொழுது அந்த ஊரில், பெருகுகின்ற இரத்தமும்; பரந்து ஒழுகி - பரவிப் பெருகி; இடை தெரிகிலாது - வேற்றுமை அறிய முடியாதபடி ஆயிற்று. இளநலார் ஓதியும்(கூந்தலும்) இரத்தமும் செந்நிறமாக இருத்தலால் வேற்றுமை தெரியாததாயிற்று. இடை - வேற்றுமை. கோதை - மாலை. ஓதி - மகளிர் முடி. (43) 5711. | தா இல்வெஞ் செரு நிலத்திடை, உலந்தவர்தம்மேல், ஓவியம் புரைநலார் விழுதொறும், சிலர் உயிர்த்து, ஏவு கண்களும்இமைத்திலர்களாம்; இது எலாம் ஆவி ஒன்று, உடல்இரண்டு, ஆயதாலேகொலாம் ? |
தா இல் வெம்செரு நிலத்திடை - குற்றம் அற்ற கொடிய போர்க்களத்திலே; உலந்தவர் தம் மேல் - இறந்து கிடந்த அரக்க வீரர் மீது; ஓவியம் புரை நலார் சிலர் விழுதொறும் - சித்திரப்பது மை போன்ற அரக்கமகளிர் சிலர் விழும் போதெல்லாம்; உயிர்த்து - பெரு மூச்சுவிட்டு; ஏவுகண்களும் இமைத்திலர்கள் ஆம் - அம்பு போன்ற தம் கண்களும் இமையாதவர்களாய் மூடியிருந்தவர் |