பக்கம் எண் :

652சுந்தர காண்டம்

விடுவாளைக் காண்மின்காண்மின் (கலி - பரணி - 483) என்ற பாடல்
ஒப்பிட்டுச் சிந்திக்கத்தக்கது.                                     (45)

5713.

தீட்டுவாள் அனைய கண் தெரிவை, ஓர் திரு
                                அனாள்,
ஆட்டில்நின்றுஅயர்வது ஓர் அறு தலைக்
                                குறையினைக்
கூட்டி, ‘நின்ஆர் உயிர்த் துணைவன், எம் கோனை,
                                 நீ,
காட்டுவாயாதி’என்று, அழுது கை கூப்பினாள்.

     தீட்டுவாள் அனையகண் - தீட்டப் பெற்ற வாள் போன்ற கண்களை
உடைய; திரு அனாள் ஓர் தெரிவை - இலக்குமி போன்ற ஒரு அரக்கி;
ஆட்டில் நின்று அயர்வது ஓர் அறு தலைக் குறையினைக் கூட்டி -
கூத்தாடும் தொழிலில் இருந்து சோர்வதான தலையற்றதோர் உடலை
(கவந்தத்தை) தலையோடு சேர்த்து,; (அதனை நோக்கி) ‘நின் ஆர் உயிர்த்
துணைவன் -
‘உனது ஒப்பற்ற உயிர்த் துணைவனாகிய; எம் கோவினை -
எமது தலைவனை; நீ காட்டுவாய் ஆதி’ என்று - நீ எனக்குக்
காட்டுவாயாக’ என்று சொல்லி; அழுது கை கூப்பினாள் -
அழுதவளாய்த்தனது கைகளைக்குவித்து வணங்கினாள்.

     வீரம் மிடைந்தஅவல ஓவியமாகக் கணவனைத் தேடும் அரக்கி
சித்தரிக்கப்பட்டுள்ளது அருமை.                                 (46)

5714.

ஏந்தினாள்தலையை, ஓர் எழுத அருங் கொம்பு
                            அனாள்;
காந்தன் நின்றுஆடுவான் உயர் கவந்தத்தினை,
‘வேந்த ! நீஅலசினாய்; விடுதியால் நடம்’ எனா,
பூந் தளிர்க்கைகளான், மெய் உறப் புல்லினாள்.

     ஓர் எழுத அரும்கொம்பு அனாள் - சித்திரத்தில் எழுதமுடியாத
மிக்க அழகுள்ள பூங்கொம்பு போன்ற ஒரு அரக்கர்மகள்; தலையை
ஏந்தினாள் -
(இறந்த கணவனது) தலையைக் கையில் ஏந்திக் கொண்டு;
நின்று ஆடுவான் காந்தன் உயர் கவந்தத் தினை - நின்று கூத்தாடுகின்ற
தன் கணவனது உயர்ந்த உடல் குறையினைப் பார்த்து; ‘வேந்த ! நீ
அலசினாய் -
கணவனே ! நீ வெகு நேரம் ஆடியதால் இளைத்து விட்டாய்;
நடம்