தா அரும் திருநகர்த் தையலார் முதல் ஏவரும் - குற்றமற்ற அழகியஇலங்கை நகரத்தில் உள்ள மகளிர் முதலிய எல்லோரும்; இடைவிழுந்துஇரங்கி ஏங்கினார் - இராவணனது பாதத்தில் விழுந்து, இரக்கம் கொண்டுஅழுதார்கள்; காவல் மாத் தேவரும் - இலங்கையைப் பாதுகாக்கின்றஉயர்ந்த காவல் தேவர்களும்; களிக்கும் சிந்தையார் - (இராவணனுக்குஉண்டான கேட்டிற்கு) உள்ளூற மகிழ்கின்றவர்களாய்; காவலன் கால் மிசைவிழுந்து அழுதனர் - இராவணன் கால்களின் மேல் விழுந்து (வெளித்தோற்றத்தில்) அழுவாராயினர். (49) |