பக்கம் எண் :

பாசப் படலம்655

11. பாசப் படலம்

     இந்திரசித்து,அனுமனைப் பாசத்தால் கட்டிய செய்தியைக் கூறுவது
இந்தப் படலம். பாசம் என்பது பெரும் பாம்பு வடிவு கொண்டு அனுமனைக்
கட்டுகின்ற பிரமாத்திரத்தைக் குறிக்கும்.

இந்திரசித்துபோருக்கு எழுதல் 

5717.

அவ் வழி,அவ் உரை கேட்ட ஆண்தகை,
வெவ் விழி எரிஉக, வெகுளி வீங்கினான்-
எவ் வழி உலகமும்குலைய, இந்திரத்
தெவ் அழிதரஉயர் விசயச் சீர்த்தியான்.

     அவ்வழி -அப்போது;அவ்உரை கேட்ட ஆண்தகை -
அக்ககுமாரன் இறந்தான் என்ற வார்த்தையைக் கேட்ட ஆண்மைக்குணம்
உடையவனும்; இந்திரன்  தெவ் அழி தர உயர் விசயம் சீர்த்தியான் -
இந்திரனாகிய பகைவன் வலி அழியுமாறு உயர்ந்த வெற்றியைக் கொண்ட
பெரும் புகழ் உடையவனுமாகிய மேகநாதன்; வெவ்விழி எரிஉக - (தனது)
கொடிய கண்களினின்று நெருப்புச் சிந்தவும்; எவ்வழி உலகமும் குலைய -
எந்த உலகமும் நடுங்கி வருந்தவும்; வெகுளி வீங்கினான் - கோபம்
மிக்கவனானான்.

     மேகநாதன்இந்திரசித்து எனப்பெயர் பெற்ற வரலாறு ‘இந்திரத்தெவ்
அழிதர உயர் விசயச் சீர்த்தியான்’ என்ற தொடரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெவ் - பகை; வீங்குதல் - மிகுதல் (வீங்கினான்).                    (1)

5718.

அரம் சுடர்வேல் தனது அனுசன் இற்ற சொல்
உரம் சுட, எரிஉயிர்த்து, ஒருவன் ஓங்கினான்-
புரம் சுட வரிசிலைப் பொருப்பு வாங்கிய
பரஞ்சுடர்ஒருவனைப் பொருவும் பான்மையான்.

     ஒருவன் - ஒப்பற்றவனானஇந்திரசித்து; அரம் சுடர் வேல் -
அரத்தினால் அராவி ஒளி வீசப்பெற்ற வேலாயுதத்தை உடைய; தனது
அனுசன் -
தனது தம்பியாகிய அக்கன்; இற்றசொல் உரம்