சுட -இறந்தான் என்ற வார்த்தை தனது மனத்தை எரித்தலால்; எரி உயிர் த்து- நெருப்புச் சுடர் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டு; புரம் சுட வரிசிலைப் பொருப்பு வாங்கிய - முப்புரத்தை எரிப்பதற்கு கட்டமைந்த வில்லாகமேரு மலையை வளைத்த; பரம் சுடர் ஒருவனை - மேலான சோதி வடிவினனான சிவபிரானை; பொருவும் பான்மையான் - ஒக்கின்ற தன்மை உடையவனாய்; ஓங்கினான் - போருக்கு எழுந்தான். அனுசன் -தம்பி. (2) 5719. | ஏறினன்,விசும்பினுக்கு எல்லை காட்டுவ ஆறு-இருநூறு பேய்பூண்ட ஆழித்தேர்; கூறின கூறினசொற்கள் கோத்தலால், பீறின நெடுந்திசை; பிளந்தது அண்டமே. |
விசும்பினுக்குஎல்லை காட்டுவ - வானத்தினது மேல்எல்லையை (இவ்வளவு என்று தனது உயர்ச்சியினால்) தெரிவிப்பனவான; ஆறு - இருநூறு பேய் பூண்ட - ஆயிரத்து இருநூறு பேய்கள் பூட்டப் பெற்றுள்ளதான; ஆழித்தேர் ஏறினன் - வலிய சக்கரங்களை உடைய தேரில் (மேகநாதன்) ஏறினான்; கூறின கூறின சொற்கள் - (அங்ஙனம் ஏறிய அவன்) மிகுதியாகச் சொன்ன வீர வார்த்தைகள்; கோத்தலால் நெடுந்திசை பீறின - ஒன்றோடு ஒன்று தொடுத்து வந்தமையால், (அவ்வதிர்ச்சியால்) நெடிய திசைகள் எல்லாம் பிளவுபட்டன; அண்டம் பிளந்தது - அண்ட கோளமும் பிளவுப்பட்டது. இந்திரசித்து,போருக்குச் சென்ற வேகமும் வீரமும் கூறப்பட்டது. விசும்பினுக்கு எல்லைகாட்டுவ - ஆகாயத்தின் மேல் எல்லை வரை உயர்ந்து விளங்கியது என்பது கருத்து. (3) அறுசீர் ஆசிரியவிருத்தம் 5720. | ஆர்த்தன,கழலும் தாரும் பேரியும், அசனி அஞ்ச; வேர்த்து, உயிர்குலைய, மேனி வெதும்பினன், அமரர் வேந்தன்; ‘சீர்த்ததுபோரும்’ என்னா, தேவர்க்கும் தேவர் ஆய மூர்த்திகள்தாமும், தம்தம் யோகத்தின் முயற்சி விட்டார். |
|