கழலும் தாரும்பேரியும் - இந்திரசித்துஅணிந்திருந்த வீரக் கழல்களும் மாலைகளும் (அவனுடன் சென்ற) முரசங்களும்; அசனி அஞ்ச ஆர்த்தன - இடியும் அஞ்சிப் பின்னிடும்படி மிகுதியாக ஒலித்தன. (அம்முழக்கம் கேட்டு); அமரர் வேந்தன் உயிர்குலைய மேனி வேர்த்து வெதும்பினன் - தேவர் தலைவனான இந்திரன் உயிர் நடுங்க உடல் வியர்த்து அச்சத்தால் வெதும்பி வருந்தினான்; தேவர்க்கும் தேவர் ஆய மூர்த்திகள் தாமும் - எல்லாத் தேவர்க்கும் தலைமைத் தேவர்களான மும்மூர்த்திகளும்; போரும் சீர்த்தது என்னா - போர் உச்சநிலை அடைந் ததுஎன்று; தம்தம் யோகத்தின் முயற்சி விட்டார் - அவரவர் செய்தொழிலின்(படைத்தல், காத்தல், அழித்தல்) முயற்சியைக் கைவிட்டார்கள். மேகநாதன்போருக்குப் புறப்பட்டதைக் கண்ட, இந்திரன், மும்மூர்த்திகள் முதலாயோர் நிலை கூறப்பட்டது. (4) 5721. | தம்பியைஉன்னும்தோறும், தாரை நீர் ததும்பும் கண்ணான், வம்பு இயல்சிலையை நோக்கி, வாய் மடித்து உருத்து நக்கான்; ‘கொம்பு இயல்மாய வாழ்க்கைக் குரங்கினால், குரங்கா ஆற்றல் எம்பியோதேய்த்தான் ? எந்தை புகழ் அன்றோ தேய்ந்தது ?’ என்றான். |
தம்பியைஉன்னும்தோறும் தாரை நீர்ததும்பும் கண்ணான் - தனதுதம்பி அக்கன் இறந்ததை நினைக்கும் பொழுதெல்லாம், தாரையாக நீர் ஒழுகும்கண்களை உடைய மேகநாதன்; வம்பு இயல் சிலையை நோக்கி - கட்டமைந்த தனது வில்லைப் பார்த்து; வாய் மடித்து உருத்து நக்கான் - தன் வாயிதழை மடித்துக் கொண்டு, கோபத்துடன் சிரித்தான்; கொம்பு இயல் மாய வாழ்க்கைக் குரங்கினால் - மரக் கொம்புகளிலே உலாவுகின்ற நிலையில்லாத வாழ்வை உடைய இந்த ஒரு குரங்கினால்; குரங்கா ஆற்றல் எம்பியோ தேய்ந்தான் - வளையாத வலிமை வாய்ந்த எனது தம்பியோ அழிந்தான் ?(இல்லை); எந்தை புகழ் அன்றோ தேய்ந்தது - எனது தந்தையாகிய இராவணனுடைய புகழ் அல்லவா மெலிவுற்று அழிந்தது என்று கூறி வருந்தினான். போருக்குச்செல்லும் மேநாதனின் எண்ணத்தைப் புலப்படுத்தியது. குரங்கா - வளையாது. (5) |