பக்கம் எண் :

66சுந்தர காண்டம்

(அனுமன்)

     ஊறு - துன்பங்கள்; கடிது ஊறுவன - வேகமாக அடைகின்றன;
ஊறுஇல் அறம் - அழிவில்லாத தருமத்தை; உன்னா - மதியாத; தேறல்இல்
அரக்கர் -
ஆராய்தல் இல்லாத அரக்கர்கள்; புரிதீமை அவைதீர -
செய்கின்ற அந்ததத் தீமை நீங்க; ஏறும் வகை எங்குளது -
(துன்பங்களிலிருந்து) ஏறுகின்ற வழி எங்கே இருக்கிறது? இராமஎன எல்லாம்
மாறும் -
இராம என்றுகூற எல்லாத் துன்பமும் (இன்பமாக) மாறும்; அதின்
பிறிது மாறு இல் -
அதைவிட வேறான பரிகாரம் இல்லை; என - என்று;
மனத்திடை நினைத்தான் - மனத்திலே உறுதிப் படுத்திக்கொண்டான்.

     அனுமன்,துன்பங்கள் அதிகமாக வருகின்றன. அவை நீங்க
இராமநாமத்தைச் செபிக்க வேண்டும் என்று கருதினான்.            (88)
 

அறுசீர் விருத்தம்

4829.

தசும்புடைக் கனக நாஞ்சில்
     கடிமதில்தணித்து நோக்கா
அசும்புடைப்பிரசத் தெய்வக்
     கற்பகநாட்டை அண்மி
விசும்பிடைச்செல்லும் வீரன்
     விலங்கிவேறு இலங்கை மூதூர்ப்
பசும்சுடர்ச்சோலைத்து ஆங்கோர்
     பவளமால்வரையில் பாய்ந்தான்.

     பிரசம் அசும்புடை- தேன்கசிதலைப் பெற்ற; தெய்வக் கற்பக
நாட்டை அண்மி -
கற்பக மரங்கள் செழித்த தேவலோகத்தை எட்டி; விசும்பு
இடைச் செல்லும் வீரன் -
ஆகாயத்தே செல்லும் அனுமன்; தணித்து -
வேகத்தைக் குறைத்து; தசும்புடை - குடங்களைப் பெற்றுள்ள; கனக நாஞ்
சில்-
பொன்மயமான ஏப்புழை அமைந்த; கடிமதில் -
காவலுடன்கூடியமதிலை;நோக்கா - பார்த்து; வேறு விலங்கி - செல்லும்
வழியை மாற்றிக் கொண்டு;மூதூர் இலங்கை - பழைய ஊராகிய
இலங்கையிலுள்ள; பசும்சுடர்சோலைத்து - பசுமையான ஒளியை உடைய;
ஆங்கு ஓர் - சோலையின் ஒருபக்கத்தில் உள்ள; பவளமால் வரையில் -
பவளமலையில்; பாய்ந்தான் -குதித்தான்.