அனுமன்இலங்கையின் மதிலைப் பார்த்து, வேகத்தைக் குறைத்துக்கொண்டு செல்லும் வழியை மாற்றிக்கொண்டு பவள மலையில் குதித்தான். விசும்பிடைச் செல்லும் வீரனின் காட்சியும் சிந்தனையும் (89-195 பாடல்வரை). தசும்பு - கோபுரங்களில் உள்ள கலசம். நாஞ்சில் பொன் மயமாய் இருக்கும் போலும். இலங்கை முதல் ...... கனக நாஞ்சில் என்று முன்பு கூறப் பெற்றது. (கம்ப. 4742). (89) 4830. | மேக்குறச்செல்வோன் பாய வேலைமேல்இலங்கை வெற்பு நூக்கு உறுத்துஅங்கும் இங்கும் தள்ளுறநுடங்கும் நோன்மை, போக்கினுக்குஇடையூ றாகப் புயலொடுபொதிந்த வாடை தாக்குறத்தகர்ந்து சாயும் கலம்எனத்தக்கது அன்றே. |
மேக்கு உறச்செல்வோன் - ஆகாயத்தில் வேகமாகப்போகும் அனுமன்; பாய - குதித்தலினால்; வேலைமேல் இலங்கை - கடலின் மேல் உள்ள இலங்கை; வெற்பு - மலை; நூக்கு உறுத்து - தள்ளப்பட்டு; அங்கும் இங்கும் தள்ளுற - அங்கும் இங்குமாகத் தள்ளப்பட்டு; நுடங்கும் நோன்மை - நுடங்குகின்ற தன்மையால்; போக்கினுக்கு - பயணம் செய்வதற்கு; இடையூறாக - தடையாக; புயலொடு பொதிந்த வாடை தாக்குற - மேகத்துடன் கூடி வாடைக் காற்று மோத; தகர்ந்து சாயும் - சிதைவுபட்டு அங்கும் இங்கும் சாய்கின்ற; கலம் எனத் தக்கது - கப்பல் என்று கூறப் பொருந்தியது. அனுமன்பாய்வதால் தள்ளாடும் இலங்கை புயற் காற்றால் அடிபட்டு நிலைகுலையும் கப்பலைப் போன்றிருந்தது. மேக்கு - ஆகாயம். நூக்குறுத்து - தள்ளப்பட்டு அன்று, ஏ - அசை. (90) 4831. | மண்அடிஉற்று, மீது வான்உறுவரம்பின் தன்மை எண்அடி யற்றகுன்றில் நிலைத்துநின்று எய்த நோக்கி, விண்இடை உலகம்என்னும் மெல்லியல்மேனி நோக்கக் |
|