பக்கம் எண் :

68சுந்தர காண்டம்

 

கண்ணடி வைத்ததுஅன்ன
     இலங்கையைத் தெரியக் கண்டான்.

(அனுமன்)

     அடிமண் உற்று- கீழ்ப்பாகம் பூமியில் பொருந்தி; மீதுவான் உறும் -
மேலே உள்ள ஆகாயத்தைப் பொருந்தியிருக்கும்; வரம்பின் தன்மை -
எல்லையின் தன்மை; எண்அடி அற்ற - நினைக்க வியலாத; குன்றில் -
பவளமலையில்; நிலைத்து நின்று - ஊன்றி நின்றுகொண்டு; விண்ணிடை
உலகம் -
வானத்தில் உள்ள தேவலோகம்; என்னும் மெல்லியல் - என்னும்
பெண்ணானவள்; மேனி நோக்க - தன்னுடைய உடம்பைப் பார்ப்பதற்கு;
கண்ணடி வைத்தது அன்ன - கண்ணாடி வைத்தாற்போன்று; இலங்கையை -
இலங்கை மாநகரை; எய்த நோக்கி - நன்றாக ஆராய்ந்து; தெரியக்
கண்டான் -
கண்களாற் பார்த்தான்.

     வரம்பு - எல்லை(சிகரம்) எய்த நோக்கி - நன்றாக ஆராய்ந்து
இருவரை எய்த நோக்கி கம்ப. 375)                            (91)

4832. 

நல்நகர்அதனை நோக்கி
     நளினக் கைமறித்து ‘நாகர்
பொன்னகர் இதனைஒக்கும்
     என்பதுபுல்லிது அம்மா
அந்நகர் இதனில்நன்றேல்
     அண்டத்தைமுழுதும் ஆள்வான்
இந்நகர் இருந்துவாழ்வான் ?
     இது அதற்குஏது என்றான்.+

(அனுமன்)

     நல்நகர்அதனை நோக்கி - அழகிய இலங்கை மாநகரைப் பார்த்து;
நளினக்கை மறித்து - தாமரை போன்ற கையை அசைத்து; நாகர்
பொன்நகர்-
தேவர்களின் அமராவதி நகரானது; இதனை ஒக்கும் என்பது
-
இந்தஇலங்கையைப் போன்றிருக்கும் என்று கூறுவது; புல்லிது -
அறிவற்றது;அம்மா - இங்ஙனம் கூறுவது அதிசயம்; இதனில்- இந்த
இலங்கையை விட;அந்நகர் நன்றேல் - அழகுடையதாயிருக்குமானால்;
அண்டத்தை முழுதும்ஆள்வான் - அண்டங்கள் யாவற்றையும் ஆளும்
இராவணன்; இந்நகர்இருந்து வாழ்வான் ? - இந்த இலங்கையிலிருந்து
வாழ்வானோ;