அதற்கு - இந்நகர் அதனினும்சிறந்தது என்ற கருத்துக்கு; இது ஏது - இது காரணம் ஆகும்; என்றான். எல்லா அண்டங்களுக்கும்உரிய இராவணன் தலைநகராக இலங்கையைக்கொண்டதனால் அமராவதியினும் சிறப்புடைத்து என்று தெரிகிறது.அனுமானத்தில் மேற்கோளை (பிரதிக்கிளை) உறுதிப்படுத்தும் வசனத்தை ஏதுஎன்றும், ஏது வாசகம் என்றும் பக்கதன்ம வசனம் என்றும் கூறுவர். இலங்கைஅமராவதியினும் சிறந்தது என்பது மேற்கோள் (பிரதிக்னை). அதனைமெய்ப்பிக்க மேற்கொண்ட ஏது அண்டங்களுக்குத் தலைவன் இலங்கையைத்தலைநகராகக் கொண்டுள்ளான் என்பது. இங்கே ஏது என்றது ஏது வாசகத்தை.ஏது என்பது தர்க்கத்தில் பேசப்படும் ஏதுவேயன்றிச் சாதாரண காரணம்அன்று. நன்னகர் - அழகிய நகர். இங்கு நல் என்பது அழகு என்னும் பொருள் தரும். நல்லிசை யாழ் என்னும் தொடருக்கு அழகிய இசையுடைய யாழ் என்று உரை கூறப்பெற்றது (புறப்பொருள் வெ.மா. 2.2.10). (92) 4833. | ‘மாண்டதோர் நலத்திற்று ஆம்’என்று உணர்த்துதல் வாய்மைத்து அன்றால்; வேண்டிய வேண்டின்எய்தி, வெறுப்புஇன்றி விழைந்து துய்க்கும் ஈண்ட அரும் போகஇன்பம் ஈறுஇலது;யாண்டுக் கண்டாம் ? ஆண்டது துறக்கம்;அஃதே அருமறைத்துணிவும் அம்மா.+ |
வேண்டிய வேண்டின்எய்தி - விரும்பிய பொருள்களை விரும்பியபடி பெற்று; வெறுப்பு இன்றி - வெறுப்பு இல்லாமல்; விழைந்து துய்க்கும் - விரும்பி அனுபவி்க்கும்; ஈண்டு அரும் போக இன்பம் - இங்கே கிடைக்காத போகத்தின் இன்பமானது; ஈறுஇலது யாண்டுக் கண்டாம் - முடிவின்மையை எங்கு பார்க்கின்றோமே; ஆண்டு அது துறக்கம் - அவ்விடத் திருப்பதே சுவர்க்க நகர்; அஃது - அந்தக் கருத்து; அருமறைத் துணிவும் - அருமையான வேதங்களின் கருத்தாகும்; (ஆதலால்) மாண்டது ஓர் நலத்திற்றாம் என்று - மாண்புமிக்க நன்மையை உடையதாம் என்று (சுவர்க்கத்தை); உணர்த்துதல் வாய்மைத்து அன்று - அறிவித்தல் உண்மையொடு கூடியதன்று. |