மை தடம்கண்ணியர் - மையிட்ட பெரியகண்களை உடையவர்களானமகளிரும்; மைந்தர் - ஆடவரும்; யாவரும் - ஆகிய எல்லோரும்;பைத்தலை அரவு என கனன்று - படத்தோடு கூடிய தலையை உடையபாம்பு போலக் கோபம் கொண்டு; பைதலை - இந்தக் குரங்குப் பயலை;இத்தனை பொழுது கொண்டு இருப்பதோ எனா - இவ்வளவு நேரம்உயிருடன் வைத்துக் கொண்டு நாம் வாளா இருப்பதோ என்று கூறி; மொய்த்தனர் - அனுமனைச் சூழ்ந்து மொய்த்துக் கொண்டனர்; சிலர் கொலை செய முயல்கின்றார் - சில அரக்கர்கள், அனுமனைக் கொலை செய்ய முயற்சி செய்வாராயினர். கண்ணியர்மைந்தர் யாவரும் மொய்த்தனர்; சிலர் கொலை செய்ய முயன்றனர் என்பதாம். (2) 5807. | ‘நச்சு அடைபடைகளால் நலியும் ஈட்டதோ, வச்சிர உடல் ?மறி கடலின்வாய் மடுத்து, உச்சியின்அழுத்துமின், உருத்து; அது அன்றுஎனின், கிச்சிடை இடும்’எனக் கிளக்கின்றார் சிலர். |
சிலர் - வேறுசிலர்;வச்சிர உடல் - இந்தக் குரங்கின் வயிரம் போன்ற உடல்; நச்சு அடை படைகளால் நலியும் ஈட்டதோ ? - விஷம் தடவிய ஆயுதங்களைக் கொண்டு வருத்தி அழிக்கப்படத் தக்கதோ?; மறி கடலின் வாய் மடுத்து உச்சியின் உருத்து அழுத்துமின் - (அன்று என்றபடி) மடங்கிவிழும் கடலினிடம் தள்ளி (வெளிக்கிளம்பாதபடி) இதனைத் தலை உச்சியில்நன்றாக அழுத்துங்கள்; அது அன்று எனின் - அவ்வாறு செய்ய முடியவில்லை என்றால்; கிச்சிடை இடும் - நெருப்பிடை இட்டுக் கொல்லுங்கள்; என கிளக்கின்றார் - என்று சொல்வாராயினர். கிச்சு -நெருப்பு; கன்னடச்சொல். (3) 5808. | ‘எந்தையை,எம்பியை, எம் முனோர்களைத் தந்தனை போக’என, தடுக்கின்றார் பலர்; ‘அந்தரத்துஅமரர்தம் ஆணையால், இவன் வந்தது’ என்று,உயிர்கொள மறுகினார் பலர். |
பலர் - வேறு பலர்;எந்தையை எம்பியை - ‘எமது தந்தையையும், எமது தம்பியையும்; எம்முன்னோர்களை - எமது தமையன்மார்களையும்; தந்தனை போகு எனா - மீளக் |