கொணர்ந்து கொடுத்துஅப்புறம் செல்’ என்று சொல்லி (அனுமனை); தடுக்கின்றார் - மறித்துக் கொள்பவரானார்கள்; பலர் - வேறு பலர்; இவன் அந்தரத்து அமரர்தம் ஆணையால் வந்தது என்று - இவன், வானில் உள்ள தேவர்களின் கட்டளையினால் இங்கு வந்ததாகும் என்று மாறாக எண்ணி; உயிர் கொள மறுகினார் - அந்த அனுமன் உயிரைப் பற்றிப் பறிக் கமுடியாது வருந்தினார்கள். தேவர்கள்அரக்கர்களுக்குப் பகைவர்களாதலால், அவர்களது ஆணையின் படி அனுமன் இலங்கைக்கு வந்திருக்கலாம் என்பது பல அரக்கர்களது எண்ணம். மறுகுதல் - மனம் குழம்புதல்; இவனை எங்ஙனம் கொல்வது என்று மனம் கலங்கினர் பலர். (4) 5809. | ‘ஓங்கல்அம் பெரு வலி உயிரின் அன்பரை நீங்கலம்;இன்றொடு நீங்கினாம்; இனி ஏங்கலம்; இவன்சிரத்து இருந்து அலால் திரு வாங்கலம்’ என்றுஅழும் மாதரார் பலர். |
ஓங்கல் அம்பெருவலி உயிரின் அன்பரை - ‘மலை போன்ற மிக்க வலிமையும் அழகும் உடைய எமது உயிர் அனைய கணவன்மார்களை; நீங்கலம் - இதுவரை நாங்கள் பிரிந்திலோம்; இன்றொடு நீங்கினாம் - (இவனால்) இன்றொடு நீங்கினவர்களானோம்; இனி ஏங்கலம் - இனி யாம் ஏக்கமுற்று வருந்தமாட்டோம்; இவன் சிரத்து இருந்து அலால் திருவாங்கலம் - இவன் தலையையே பீடமாகக் கொண்டு உட்கார்ந்து இருத்தலால், எங்கள் திருமாங்கல்யத்தை வாங்கி அகற்ற மாட்டோம்’; என்று அழும் மாதரார் பலர் - என்று சொல்லி அழும் அரக்க மகளிர் பலராவர். ‘தாலி வாங்கும்துக்கச் சடங்கை, குரங்கினைக் கொன்று, அதன் தலையின் மேல் தான் நடத்துவோம்’ என்று அரக்க மகளிர் வீராவேசத்துடன் கூறினர் என்க. (5) 5810. | கொண்டனர்எதிர் செலும் கொற்ற மா நகர், அண்டம் உற்றது,நெடிது ஆர்க்கும் ஆர்ப்புஅது- கண்டம் உற்றுளஅருங் கணவர்க்கு ஏங்கிய குண்டலமுகத்தியர்க்கு உவகை கூரவே. |
கொண்டனர் -அனுமனைப்பற்றி இழுத்துக் கொண்டு செல்பவர்களுக்கு; எதிர் செலும் கொற்ற மாநகர் - எதிரே |