வேடிக்கை பார்க்கவருகின்ற வெற்றியை உடைய இலங்கை நகரில் உள்ள அரக்கர்கள்; நெடிது ஆர்க்கும் ஆர்ப்பு அது - பெரிதாய் முழக்கும் ஆரவார ஒலி; கண்டம் உற்று உள - (அனுமனால் போரில்) கழுத்து அறுபட்டு அழிவடைந்துள்ள; அரும் கணவர்க்கு ஏங்கிய குண்டல முகத்தியர்க்கு - தமது அரிய கணவர்களுக்காக ஏக்கமுற்று வருந்திய, குண்டலம் விளங்கும் முகத்தை உடைய அரக்கமகளிர்க்கு; உவகை கூர - மகிழ்ச்சி மேலோங்கிவர,; அண்டம் உற்றது - உலகம் முழுதும் பரவிற்று. தம்கணவன்மார்களைக் கொன்ற அனுமனைக் கட்டி இழுத்து வரும் செய்தியைக் கண்ட அரக்கர்களது பேரொலியைக் கேட்டதனால், கணவர்களை இழந்த மகளிர்கள் மகிழ்ந்தனர் என்க. (6) இலங்கையின் அழிவுபாடுகளைக் கண்டவாறு அனுமன் செல்லுதல் 5811. | வடியுடைக்கனல் படை வயவர், மால் கரி, கொடியுடைத்தேர், பரி கொண்டு வீசலின், இடி படச்சிதைந்த மால் வரையின், இல் எலாம் பொடிபடக்கிடந்தன கண்டு, போயினான். |
வடி உடை கனல்படை வயவர் - கூர்மை பொருந்தியநெருப்பைப் போன்ற கொடிய ஆயுதங்களைக் கொண்ட போர் வீரர்களையும்; மால்கரி கொடி உடை தேர் பரி கொண்டு வீசலின் - பெரிய யானை, கொடிகட்டிய தேர், குதிரை ஆகியவற்றை (தான்) கையில் எடுத்து வீசி எறிந்ததனால்; இடிபட சிதைந்த மால் வரையின் - இடி விழுதலால் சிதைவுபட்ட பெரிய மலைகள் போல; பொடி பட கிடந்தன இல் எலாம் - பொடிப் பொடியாக நொறுங்கிக் கிடந்தனவான இலங்கை நகரத்து வீடுகளை எல்லாம்; கண்டு - (மகிழ்ச்சியோடு) பார்த்துக் கொண்டே; போயினான் - (அனுமன் அந்நகரத்து வீதிகளின் வழியாய்ச்) சென்றான். அனுமன் இலங்கைநகரத்து மாளிகைகளின் இடிபாடுகளைப் பார்த்துக் கொண்டு, மகிழ்ச்சியை வெளிக்காட்டாது வீதி வழியே சென்றான் என்பது கருத்து. (7) அனுமனைக் கண்டோர்செயல் 5812. | முயிறுஅலைத்து எழு முது மரத்தின், மொய்ம்பு தோள் கயிறுஅலைப்புண்டது கண்டும், காண்கிலாது, |
|