பக்கம் எண் :

பிணி வீட்டு படலம்711

 

எயிறு அலைத்து எழும் இதழ் அரக்கர் ஏழையர்
வயிறு அலைத்துஇரியலின், மயங்கினார் பலர்.

     முயிறு அலைத்து எழுமுது மரத்தின் - எறும்பினங்களால்
சூழப்பெற்று வளர்ந்த ஒரு பழைய மரத்தைப் போல; மொய்ம்பு தோள் -
அனுமனது வலிய தோள்களை; கயிறு அலைப் புண்டது கண்டும் -
நாகபாசம் கட்டி வருத்தியிருப்பதைப் பார்த்தும்; காண்கிலாது - (பயத்தினால்)
பார்க்காமல்; ஏழையர் வயிறு அலைத்து இரியலின் - பேதையர்களான
அரக்கிமார்கள் (குரங்கு இங்கும் வந்துவிட்டதோ என்று அஞ்சி) வயிற்றைப்
பிசைந்து கொண்டு ஓடுதலின்; எயிறு அலைத்து எழும் இதழ் அரக்கர்
பலர்-
கோரைப் பற்கள் அச்சத்தால் நடுங்கி மேற்கிளம்பும் உதட்டை உடைய
அரக்கர் பலர்; மயங்கினார் - (இக்குரங்கு என்ன தீமை செய்யத்
தொடங்கியதோ என்று) திகைப்புற்றார்கள்.

     முயிறு - ஒருவகைச்செவ்வெறும்பு. இது நாகபாசத்துக்கும் முதுமரம்,
அனுமன் தோளுக்கும் உவமைகள்.                              (8)

5813.

ஆர்ப்பு உறஅஞ்சினர்; அடங்கினார் பலர்;
போர்ப்புறச்செயலினைப் புகல்கின்றார் பலர்;
பார்ப்புற,பார்ப்புற, பயத்தினால் பதைத்து,
ஊர்ப் புறத்துஇரியலுற்று ஓடுவார், பலர்.

     பலர், ஆர்ப்புஉற அஞ்சினர் அடங்கினார் - பல அரக்கர்கள்,
நகரில் ஆரவாரம் உண்டாக, (அதனைக் கேட்டு) பயந்தவர்களாய்
அடங்கியிருந்தனர்; பலர் போர் புறச் செயலினை புகல்கின்றார் - வேறு
பலஅரக்கர்கள், (அனுமான்) போரில் செய்த வீரச் செயல்களை எடுத்துக்
கூறுவாராயினார்; பலர் பார்ப்புற பார்ப்புற  - மற்றும் பல அரக்கர்கள்,
அனுமனைப் பார்க்கும் போதெல்லாம்; பயத்தினால் பதைத்து ஊர்ப் புறத்து
இரியலுற்று ஓடுவார் -
அச்சத்தால் நடுங்கி, ஊருக்கு வெளியே சிதறி
ஓடுபவரானார்கள்.

     அனுமனைக் கண்டஅரக்கர் பலரின் செயல்கள் கூறப்பட்டன.    (9)

5814.‘காந்துறுகதழ் எயிற்று அரவின் கட்டு, ஒரு
பூந் துணர்சேர்த்தெனப் பொலியும், வாள் முகம்;