| என்கொண்டுஇயற்றிய எனத்தெரிவு இலாத- வன்கொண்டல்விட்டுமதி முட்டுவன மாடம். |
வன்கொண்டல்விட்டு - வலிமையான மேகமண்டலத்தைப் பின்னே தள்ளிவிட்டு; மதிமுட்டுவன மாடம் - சந்திர மண்டலத்தை மோதுவனவான மாடிவீடுகள்; பொன்கொண்டு இழைத்த ? - பொன்னைக் கொண்டு செய்யப் பெற்றனவா (அதன்மேல்); மணியைக் கொடு பொதிந்த ? -மாணிக்கங்களைக் கொண்டு மூடப்பெற்றனவா ?; மின்கொண்டு அமைத்த? - மின்னலைக் கொண்டு அமைக்கப் பெற்றனவா (அதன்மேல்); வெயிலைக் கொடு சமைத்த ? - (சூரியனின்) வெயிலைக் கொண்டு முலாம் பூசப் பெற்றனவா; என்கொண்டு இயற்றிய - எந்தப் பொருளைக் கொண்டு இயற்றப்பெற்றன; எனத் தெரிவு இலாத - என்று ஆராய்ச்சி செய்ய முடியாதபடி உள்ளன. மணியைக் கொண்டுபொதித்த என்று கூறப்பெற்றதால் அதற்கேற்ப வெயிலைக் கொண்டு பொதிந்த என்பதற்கு வெயிலைக் கொண்டு முலாம் பூசப் பெற்றது என்று கூறப்பெற்றது. மாடம் - உப்பரிகை அமைந்த வீடு. கொண்டல், மதி என்பவை ஆகுபெயராக அந்த அந்த மண்டலத்தை உணர்த்தின. இப்பாடல் முதல் 136வரை அனுமனின் எண்ண ஓட்டம். கவியின் மொழியன்று. (1)
4836. | நாகாலயங்களொடு நாகர் உலகும், தம் பாகு ஆர்மருங்குதுயில்வென்ன உயர்பண்ப; ஆகாயம்அஞ்சஅகல் மேருவை அனுக்கும் மாகால் வழங்குசிறு தென்றல்என நின்ற. | நாகாலயங்களொடு- நாகங்கள் வாழும் பாதாள உலகமும்; நாகர் உலகும் - தேவர்கள் வாழும் விண்ணுலகமும்; தம் - தம்முடைய; பாகு ஆர்மருங்கு - அழகு நிரம்பிய பக்கத்தில்; துயில்வென்ன - தங்குவன என் றுகூறும்படி; உயர்பண்ப - உயரிய இயல்பைப் பெற்ற மாடங்கள்; ஆகாயம்அஞ்ச - விண்ணுலகம் அஞ்சும்படியாக; அகல் மேருவை அனுக்கும் -பரந்த மேருமலையை வருத்துகின்ற; மாகால் - பெரிய சண்ட மாருதமும்;வழங்கு சிறு தென்றல் - (மெல்ல) இயங்குகின்ற தென்றல் காற்று; என நின்ற- என்று கூறும்படி தலைநிமிர்ந்து நிற்பன. |