பக்கம் எண் :

ஊர் தேடு படலம்73

     மாடங்களின்கீழ்ப் பகுதியில் பாதாளவுலகமும், மேற்பகுதியில்
விண்ணுலகமும் தங்கியுள்ளன என்று கூறும்படி நிலவறைகளையும் மேல்
உப்பரிகைகளையும் பெற்றுள்ளது என்பது கருத்து.

     மாகால் தென்றல்என நின்ற என்றதனால் மாடங்களின் உறுதி
தெரிகிறது. பண்ப - பண்பை உடைய மாளிகைகள் - எழுவாய். நின்ற -
பலவின்பால் வினைமுற்று. பயனிலை. பண்பநின்ற என்று கூட்டிப் பார்க்கவும்.
                                                         (2)

4837.

மாகாரின் மின்கொடி மடக்கினர் அடுக்கி;
மீகாரம்எங்கணும் நறுந்துகள் விளக்கி
ஆகாய கங்கையினைஅங்கையினின் அள்ளிப்
பாகுஆய;செஞ்சொலவர் வீசபடு காரம்.

     செஞ்சொலவர் -செவ்வியசொற்களைப் பேசும் மகளிர்; மாகாரின் -
பெரிய மேகத்தில் உள்ள; மின்கொடி - மின்னல் கொடிகளை; மடக்கினர்
அடுக்கி -
மடக்கி ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து அடுக்கி; மீகாரம்
எங்கணும் -
உயர்ந்த மாளிகையின் எல்லாப் பகுதியினும்(உள்ள); நறுந்துகள்
விளக்கி -
நறுமணம் வீசும்மகரந்தக் குப்பைகளைத் துடைத்து (பிறகு);
அங்கையினில் ஆகாயகங் கையினை - கைகளால் ஆகாய கங்கைநீரை;
அள்ளி - முகந்து எடுத்து;வீசுபடுகாரம் - தெளிக்கின்ற திறமை; பாகுஆய
-
அழகாக உள்ளது.


     
படுகாரம் - பாகாயஎனக்கூட்டுக. படுகாரம் என்பதற்குப் பெரிய வீடு
என்று பொருள்கூறி அது அழகாக உள்ளது என்றும் கூறுவர். மேல்தளங்களில்
உள்ள குங்குமத் துகள்களை விளக்கி, ஆகாய கங்கை நீரைக் கையாலே
முகந்து தெளிக்கும் சாமர்த்தியம் அழகாயது என்பது பழைய உரை.    (3)

கலிநிலைத்துறை

4838. 

பஞ்சிஊட்டிய, பரட்டுஇசைக் கிண்கிணிப் பதுமச்
செஞ்செவிச்செழும் பவளத்தின் கொழுஞ்சுடர் சிதறி
மஞ்சின் அஞ்சனநிறம் மறைத்து, அரக்கியர் வடித்த
அம்சில்ஓதியோடு உவமைய ஆக்குற அமைவ.

     பஞ்சி ஊட்டிய -செம்பஞ்சுக் குழம்பு பூசப்பெற்றதும்; பரட்டு இசை
கிண்கிணி -
கெண்டைக்காலில் அமைந்த கிண்கிணியோடு கூடியதும் (ஆகிய);
பதுமம் - தாமரை போன்ற பாதங்களின்;