செஞ்செவி - செம்மையானஅழகிய; செழும் பவளத்தின் - செழிப்பான பவளம் போன்ற விரல்களின்; கொழும்சுடர் சிதறி - ஒளியானது பரவி; மஞ்சின் - மேகத்தின்; அஞ்சன நிறம் மறைத்து - மையை ஒத்த கரிய நிறம்மறையச் செய்து; அரக்கியர் வடித்த - அரக்கியர்கள் ஒழுங்கு செய்த; அம்சில் ஓதியோடு - அழகிய மென்மையான (சிவந்த) கூந்தலுடன்; உவமைய ஆக்குற - ஒப்புமையாகச் செய்ய; அமைவ - பொருந்தியிருப்பன. மகளிரின் கால்விரலின் ஒளிபட்டு கரிய மேகம் அரக்கியரின் சிவந்த கூந்தலின் நிறத்தைப் பெற்றது. பரடு அமை கிண்கிணி - கெண்டைக் காலில் அமைந்த கிண்கிணி; பரடுபுல்லிக் கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்ப (சிந்தாமணி - இலக்கணை 98) சுடர் - எழுவாய். சில் ஓதி - மென்மையான கூந்தல். மா - விளம் - விளம் - மா எனும் சீர்களை முறையே பெற்றுவரும் இக் கலித்துறை. இத்தகைய பாடல்கள் 1223 இந்நூலில் உள்ளன. (4) 4839. | நானநாள்மலர்க் கற்பக நறுவிரை நான்ற பானம் வாய்உறவெறுத்த, தான்ஆறுடைப் பறவை தேன்அவாம்விரைச் செழுங் கழுநீர்த் துயில்செய்ய வானயாறுதம்அரமியத் தலம்தொறும் மடுப்ப. |
நாள் - அன்று பூத்த; நான மலர்க் கற்பகம் - மணத்துடன் கூடிய மலர்களைப் பெற்ற கற்பக மரங்களின்; நறுவிரை நான்ற பானம் - நல்ல மணத்துடன் பெருகிய தேன்; வாய் உற வெறுத்த - தம்முடைய வாயில் பெருக (உண்டு) தெவிட்டிய; ஆறு தாள் உடைப் பறவை - ஆறு கால்களைப் பெற்ற வண்டுகள்; தேன் அவாம் - வேறு தேனை உண்ண விரும்பி; விரை செழுங்கழுநீர் - மணத்துடன் கூடிய செங்கழுநீர்ப் பூவில்; துயில் செய்ய - தங்குதலை மேற்கொள்ளும்படி; வான யாறு - ஆகாய கங்கையானது; தம் அரமியத் தலந்தொறும் - அவரது நிலா முற்றங்கள்தோறும்; மடுப்ப - பாயப் பெற்றன. பானம் வாயுறஎன்பதற்கு உண்ட தேன் வாய்வழியே வெளிப்பட என்றும் கூறலாம். (5) 4840. | குழலும் வீணையும் யாழும் என்று இனையன குழைய மழலை மென்மொழிகிளிக்கு இருந்து அளிக்கின்ற மகளிர் |
|