பக்கம் எண் :

818சுந்தர காண்டம்

 

மோதினன்;மோத, முனிந்தார்
ஏதியும் நாளும்இழந்தார்.

     மாதிரம் வாலின்வளைத்தான் - எல்லாத் திசைகளையும்தனது
வாலினால் வளைத்துக் கொண்ட அனுமன்; பாதவம் ஒன்று பகுத்தான் -
ஒருமரத்தைப் பெயர்த்தெடுத்து; மோதினன் - அம்மரத்தால் அரக்கர்களை
அடித்தான்; மோத முனிந்தார் - அடித்ததனால் கோபம் கொண்டு
வந்தவர்களான அந்த அரக்கர்கள்; ஏதியும் நாளும் இழந்தார் - தமது
ஆயுதங்களையும் வாழ்நாளையும் இழந்தார்கள்.

     பாதவம் - மரம்;ஏதி - படைக்கலம்.                      (55)

5998.

நூறிடமாருதி, நொந்தார்
ஊறிட, ஊன் இடுபுண்ணீர்,
சேறு இட, ஊர் அடுசெந் தீ
ஆறிட, ஓடினதுஆறாய்.

     மாருதி நூறிடநொந்தார் - அனுமன் அவ்வாறு அடிக்க
வருந்தினவர்களான அரக்கர்கள்; ஊறு இட ஊன் இடு புண்ணீர் சேறு இட
-
காயம் அடைய அதனால், அவர் உடம்பினின்றும் பெருகிய இரத்தமானது,
சேற்றை உண்டாக்க; ஊர் அடு செந்தீ ஆறிட ஆறாய் ஓடினது -
அவ்வூரை எரித்த சிவந்த நெருப்பு தணியும் படி ஆறாகப் பெருகிற்று.

     அனுமனால்மோதுண்ட அரக்கரின் இரத்தப் பெருக்கு பற்றிக்
கூறப்பட்டது.                                                 (56)

5999.

தோற்றினர் துஞ்சினர் அல்லார்
ஏற்று இகல்வீரர், எதிர்ந்தார்;
காற்றின் மகன்,கலை கற்றான்,
கூற்றினும் மும்மடி கொன்றான்.

     துஞ்சினர்அல்லோர் தோற்றினர் ஏறு இகல்வீரர் - இறந்தவர்கள்
போக அங்குத் தென்பட்டவர்களான ஆண்சிங்கம் போன்ற வீரர்கள்;
எதிர்ந்தார் -
அனுமனை எதிர்த்தார்கள்; காற்றின் மகன் கலை கற்றான் -
வாயு தேவன் மகனும் எல்லாக்கலைகளையும் கற்றவனுமாகிய அனுமன்;
கூற்றினும் மும்மடி கொன்றான் -
யமனைவிட மூன்று மடங்கு அவர்களைக்
கொன்றுவிட்டான்.                                           (57)