6000. | மஞ்சு உறழ்மேனியர் வன் தோள் மொய்ம்பினர்வீரர் முடிந்தார் ஐம்பதினாயிரர்;அல்லார், பைம் புனல் வேலைபடிந்தார். |
மஞ்சு உறழ்மேனியர் - மேகம் போன்றகருநிறம் கொண்ட உடலை உடையவர்களும்; வன் தோள் மொய்ம்பினர் - வலிய தோள்களும் ஆற்றலும் கொண்டவர்களுமான; வீரர் - படை வீரர்களில்; ஐம்பதினாயிரர் முடிந்தார் - ஐம்பதினாயிரம் பேர் இறந்தார்கள்; அல்லார் பைம்புனல் வேலை படிந்தார் - அவர்கள் அல்லாதவர் எல்லாம் பசுமையாகக் காணப்படுகின்ற நீரையுடைய கடலில் போய் விழுந்தார்கள். (58) 6001. | தோய்த்தனன் வால்; அது தோயக் காய்ச்சின வேலைகலந்தார், போய்ச் சிலர்பொன்றினர் போனார் ‘ஏச்சு’ என,மைந்தர் எதிர்ந்தார். |
வால்தோய்த்தனன் - அனுமன் தனது வாலைக்கடலில் தோய்த்தான்; அது தோய - (நெருப்பு பிடித்த) அந்த வாலைத் தோய்த்ததினால்; காய்ச்சின வேலை போய் கலந்தார் சிலர் - கொதிப்படைந்த கடலில் சென்று முழுகியவர்களில் சிலர்; பொன்றினர் போனார் மைந்தர் - இறந்தொழிந்தார்கள் (சில இறவாது நின்ற) வீரர்கள்; ஏச்சு என - (இவ்வாறு கடலில் மூழ்குவது) நமக்கு இழிவு என்று கருதி; எதிர்ந்தார் - அனுமனை எதிர்த்தார்கள். மைந்தர் -வலிமை உடையவர்; வீரர். (59) 6002. | சுற்றின தேரினர் தோலா வில் தொழில்வீரம் விளைத்தார்; எற்றினன்மாருதி; எற்ற, உற்று எழுவோரும்உலந்தார். |
சுற்றின தேரினர்- அனுமனைச் சூழ்ந்து கொண்ட தேர் ஏறிய வீரர்கள்;தோலா வில் தொழில் வீரம் விளைத்தார் - தோல்வி அடையாத தம்விற்போர்த் தொழிலில் வீரத்தைக் காட்டிப் போர் செய்தார்கள்; மாருதி எற்றினன் - அனுமன் அவர்களைத் தாக்கி |