பக்கம் எண் :

820சுந்தர காண்டம்

அடித்தான்; எற்ற -அவ்வாறு தாக்கியதனால்; உற்று எழுவோரும்
உலந்தார்-
அடிபட்டு பொர முனைந்து எழுந்த வீரர்களும் அழிந்தார்கள்.

     ‘எழுவோர்’ - ஏழுவீரர்கள் என்றும், இவர்கள் அமைச்சர்களின் மக்கள்
என்றும் பொருள் விளக்கம் கொடுக்கலாம். 51-ம் பாடலில் ஓர் எழு வீரர்
உயர்ந்தார் ? என்ற தொடரை நோக்கும் போது எழுவோர் ? என்பதற்கு
ஏழுவீரர்கள் எனப் பொருள் கொள்வது பொருத்தமே.               (60)

பிராட்டியின்திருவடிகளை வணங்கி,
அனுமன் மீள, அழலும்மறைதல் 

6003.

விட்டுஉயர் விஞ்சையர், ‘வெந் தீ
வட்ட முலைத் திருவைகும்
புள் திரள்சோலை புறத்தும்
சுட்டிலது’ என்பதுசொன்னார்.

     விட்டு உயர்விஞ்சையர் - அவ்விடம் விட்டு மேலேசென்ற
வித்தியாதரர்; வெம் தீ - அனுமன் வாலில் வைத்த கொடிய நெருப்பு,
(அனைத்தையும் எரித்த நெருப்பு); வட்ட முலை திரு வைகும் புள் திரள்
சோலை புறத்தும் சுட்டிலது -
வட்டமான முலையை உடைய திருமகள்
(சீதை) இருக்கின்ற பறவைக் கூட்டம் நிறைந்த சோலையின், வெளியிடத்தைக்
கூட சுடவில்லை; என்பது சொன்னார் - என்ற செய்தியை வியப்பாகத்
தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.                     (61)

6004.

வந்தவர்சொல்ல மகிழ்ந்தான்;                    
வெந் திறல்வீரன் வியந்தான்;
‘உய்ந்தனென்’என்ன, உயர்ந்தான்,
பைந்தொடிதாள்கள் பணிந்தான்.

     வந்தவர் சொல்ல- (வானத்தில்) வந்தவர்களான வித்தியாதரர்
இவ்வாறுசொல்ல; வெம் திறல் வீரன் - (அது கேட்டு) ஆண்மை மிக்க
வீரனானஅனுமன்; மகிழ்ந்தான் - மகிழ்ச்சி கொண்டு; வியந்தான் -
வியப்படைந்து;உய்ந்தனன் என்ன உயர்ந்தான் - (தீ வினையினின்று யான்)
தப்பினேன்என்று எண்ணி, அவ்விடம் விட்டு மேலே எழுந்தவனாகிச் சென்று;
பைந்தொடி தாள்கள் பணிந்தான் - பசுமையான பொன் வளையல்களை
அணிந்தபிராட்டியின் திருவடிகளில் பணிந்து வணங்கினான்.