பக்கம் எண் :

இலங்கை எரியூட்டு படலம்821

     தான் இட்டதீயினால், அசோகவனத்துக்கோ, பிராட்டிக்கோ, துன்பம்
எதுவும் நேரவில்லை என்பதை வித்தியாதரர் பேசிக் கொண்ட பேச்சின் மூலம்
அறிந்த அனுமன், உய்ந்தனன் என மகிழ்ந்தான். பிராட்டி தீப்பற்றி
இறந்திருந்தால் அது தனக்குப் பெரும் பழியாகி விடுமே என்று பயந்து
கொண்டிருந்தான் அனுமன் என்பதை, ‘உய்ந்தனன், என்ற தொடர் உணர
வைக்கின்றது. முதல் நூலில் விரிவாகச் சொல்லிக்காட்டப்பட்ட அனுமனது
அச்சம் நிறைந்த எண்ணம் ‘உய்ந்தனன்’ என்ற ஒருதொடரில் சுருக்கிக்
காட்டப்பட்டுள்ளது. இது ‘சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல்’ என்ற உத்திக்கு
இலக்கணமாக அமைந்துள்ளது என்னலாம்.                         (62)

6005.

பார்த்தனள், சானகி, பாரா
‘வேர்த்து எரிமேனி குளிர்ந்தாள்,
‘வார்த்தை என்?’ ‘வந்தனை’ என்னா,
போர்த்தொழில் மாருதி போனான்.

     சானகிபார்த்தனள் - பிராட்டி தன்னைவணங்கிய அனுமனைப்
பார்த்தாள்; பாரா - பார்த்தவுடன்; வேர்த்து எரி மேனி குளிர்ந்தாள் -
(அனுமனுக்கு என்ன ஆயிற்றோ என) வியர்த்துக் கொதிக்கின்ற தன் உடல்
குளிர்ந்தவளானாள்; வார்த்தை என் ? - யான் சொல்ல வேண்டியது
எதுவேனும் உளதோ என்றாள்; போர் தொழில் மாருதி வந்தனை என்னா
போனான் -
போர் செய்வதில் வல்லவனான அனுமன் ‘வணக்கம்’ என்று
சொல்லி, பிராட்டியிடம் விடை பெற்றுச் சென்றான்.

     ‘வார்த்தை என்?’ என்பதை அனுமன் கூற்றாகவும் கொள்ளலாம்.
‘வார்த்தை உண்டோ என்று பிராட்டி கேட்டருளத் தேவரீரைச் சேவிக்க விடை
கொண்டேன் என்று விண்ணப்பம் செய்தார் மாருதி’ என்பது பழைய உரை.
                                                          (63)

6006.

‘தெள்ளியமாருதி சென்றான்;
கள்ள அரக்கர்கள் கண்டால்,
எள்ளுவர்,பற்றுவர்’ என்னா,
ஒள் எரியோனும்ஒளித்தான்.

     தெள்ளிய மாருதி- தெளிந்த ஞானமுடைய அனுமனோ; சென்றான் -
போய்விட்டான்; கள்ள அரக்கர்கள் கண்டால் எள்ளுவர் பற்றுவர்
என்னா-
திருட்டுச் செயலுக்குரிய அரக்கர்கள் என்னைக் கண்டால் நிந்தித்து
என்னைப் பிடித்துச்   செல்வர்